ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்த இலங்கை வீரர்கள்

125

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்திருக்கின்றனர். 

வயதானாலும் கிரிக்கெட்டுக்கு GoodBye சொல்லாத நட்சத்திரங்கள்

அந்தவகையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெறும் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது சிறந்த ஒருநாள் பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்த, இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீர ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் தனது சிறந்த பதிவை நிலைநாட்டியிருக்கின்றார்.

அதன்படி தனது சிறந்தபந்துவீச்சுப் பிரதியிற்காக ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 27 இடங்கள் முன்னேறியிருக்கும் துஷ்மன்த சமீர, தற்போது 33ஆவது இடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்து. 

இதேநேரம், குறித்த போட்டியில் சதம் விளாசிய இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் குசல் பெரேரா, ஒருநாள் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 13 இடங்கள் முன்னேறி 42ஆவது இடத்தினைப் பெற்றிருக்கின்றார். 

இங்கிலாந்து அணியின் உப தலைவரானார் ஸ்டுவர்ட் பிரோட்

அதேநேரம், குறித்த போட்டியில் இலங்கை அணி சார்பில் அரைச்சதம் விளாசிய இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர் தனன்ஞய டி சில்வா தனது ஆட்டத்திற்காக 2 இடங்கள் முன்னேறி தற்போது ஒருநாள் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 36ஆவது இடத்தினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் தவிர பங்களாதேஷ் அணியின் வீரர்களான தஸ்கின் அஹமட் மற்றும் மொசாதிக் ஹொசைன் ஆகியோரும் ஒருநாள் தரவரிசைகளில் முன்னேற்றம் காண்பித்திருக்கின்றனர். 

இதில் மொசாதிக் ஹொசைன் ஒருநாள் துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 113 ஆவது இடத்தில் காணப்பட, தஸ்கின் அஹமட் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 88ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…