நியூசிலாந்தில் விளையாடவுள்ள சமரி அதபத்து!

Super Smash Women 2023-24

1136

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் சுபர் ஸ்மேஷ் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமரி அதபத்து அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிக் பேஷ் லீக்கில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

>> ஆசிய விளையாட்டு விழா நாயகர்களை கௌரவிக்கும் இலங்கை கிரிக்கெட்

இவ்வாறான நிலையில் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள சுபர் ஸ்மேஷ் தொடரில் நொர்தென் பிரேவ் அணிக்காக சமரி அதபத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் பிக் பேஷ் லீக்கில் விளையாடி வரும் சமரி அதபத்து இதுவரையில் 10 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 50.11 என்ற ஓட்ட சராசரியில் 451 ஓட்டங்களை குவித்துள்ளார்.

மகளிர் சுபர் ஸ்மேஷ் தொடரானது அடுத்த மாதம் 19ம் திகதி ஆரம்பமாகி ஜனவரி 28ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<