BRC, SSC, கோல்ட்ஸ் மற்றும் சோனகர் விளையாட்டுக் கழகங்கள் அரையிறுதிக்குத் தெரிவு

476
BRC Sixes Cricket Day 1 2016

20 வருடங்களுக்குப் பின்னர் பிரசித்திபெற்ற BRC சிக்ஸ்சர்ஸ் இன்று BRC மற்றும் கோல்ட்ஸ் மைதானங்களில் இடம்பெற்றன. கால் இறுதிக்கு முந்தைய மற்றும் கால் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. நாளை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன. சம்பியனாகும் அணிக்கு 1 மில்லியன் ரூபாவும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

BRC சிக்ஸர்ஸ் 1969ஆம் ஆண்டு முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டு, அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து ரசிக்கும் ஒரு கிரிக்கெட் போட்டியாக உருவெடுத்திருந்தது.  BRC விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் இறுதியாக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற BRC சிக்ஸர்ஸ் போட்டியில் தீபால் மதுரப்பெரும தலைமையிலான BRC அணி சம்பியன் ஆனது.

குறிப்பிட்ட போட்டிகளின்போது வழமையான போட்டி விதிகள் கடைபிடிக்கப்படும். சிறப்பு விதியாக, தனிப்பட்ட வீரர் ஒருவர் 31 ஓட்டங்கள் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர் ஓய்வு பெற வேண்டும். அதே சமயம் 31 ஓட்டங்களுக்கு முன்னர் காயம் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக ஓய்வு பெற முடியாது. மேலும், 5 ஓவர்களுக்கு முன்னதாக சகல விக்கெட்டுகளும் இழக்கப்படும் பட்சத்தில் மீண்டும் குறிப்பிட்ட வீரர் துடுப்பாட வரலாம்.

இப்போட்டிகளின் போது வைட் மற்றும் நோ போல் பந்து வீசப்பட்டால் எதிரணிக்கு இரண்டு ஓட்டங்கள் வழங்கப்படும். அதேநேரம், மீண்டும் பந்து வீச வேண்டும். மேலும் அனைத்து வீரர்களும் வெள்ளை சீருடை அணிந்திருத்தல் வேண்டும். அத்துடன், இப்போட்டிகளுக்காக சிவப்பு நிறப் பந்தே உபயோகிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லீக் போட்டிகள் போல் அல்லாது, பங்குபற்றிய 16 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய போட்டிகளுடன் ஆரம்பித்தன. நொக் அவுட் முறையில் இடம்பெற்ற இப்போட்டிகளில் தோல்வியுறும் அணிகள் அனைத்தும் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படும்.

காலிறுதிக்கு முந்தைய போட்டிகளில் BRC, CCC, சிலாவ் மெரியன்ஸ், SSC, சராசின் விளையாட்டு கழகம், சோனகர் விளையாட்டுக் கழகம், இலங்கை கடற்படை அணி மற்றும் கோல்ட்ஸ் அணிகள் முறையே இராணுவ விளையாட்டுக் கழகம், காலி CC, ராகம CC, புளூம்பீல்ட், தமிழ் யூனியன், துறைமுக அதிகார சபை, NCC மற்றும் பதுரலிய SC அணிகளை வெற்றிகொண்டு காலிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகின.

காலிறுதி போட்டிகளில் பங்கு கொண்ட BRC அணி, CCC அணியுடன் கடினமான போட்டியை எதிர்கொணடு 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அதே நேரம் SSC அணி சிலாவ் மரியன்ஸ் அணியை திணறடித்து 32 ஓட்டங்களால் வெற்றி பெற்ற SSC அணி முதல் தடவையாக 100 ஓட்டங்களுக்கு மேல் பதிவு செய்தது.

கோல்ட்ஸ் அணி இலங்கை கடற்படை அணியை வெற்றி கொண்ட அதே நேரம், சோனகர் அணி, சராசின் விளையாட்டுக் கழகத்தை 18 ஓட்டங்களால் வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றது.

காலிறுதிக்கு முந்தைய போட்டிகள்

BRC – 66/4 (5) இந்திக டி சேரம் 30, T.M. சம்பத் 14

இலங்கை இராணுவ அணி – 41 (3.3) ஜனக சம்பத் 32, விக்கும் சஞ்சய 2/04, ரமேஷ் புத்திக 2/05


CCC – 83/2 (5) அஷான் ப்ரியஞ்சன் 35ஓய்வு, மாதவ வர்ணப்புர 26 *

காலி கிரிக்கெட் கழகம் – 64/3 (5) சலிக்ககருணாநாயக்க 32*ஓய்வு


றாகம கிரிக்கெட் கழகம் -50/5 (5) கோஷான் தனுஷ்க 26

சிலாபம் மரியன்ஸ் – 52/2 (3.4) இசுறு உதான 32*ஓய்வு


எஸ்.எஸ்.சி. – 73/2 (5) தனுஸ்க்க குணதிலக 26 *, ரமேஷ் மெண்டிஸ் 26

புளூம்பீல்ட்- 72/1 (5) நிபுன் கருணாநாயக்க 36*, அதீஷ நாணயக்கார 30*


தமிழ் யூனியன் – 60/3 (5) புலின தரங்க 32*ஓய்வு

சராசின் விளையாட்டு கழகம் – 64/2 (4.1) தெனுவன் ராஜகருண 21 *, கீத் அல்விஸ் 17


துறைமுக அதிகார சபை – 58/5 (5) அணுக் டி அல்விஸ் 19, தரிந்து மெண்டிஸ் 2/07

சோனகர் விளையாட்டு கழகம் – 59/1 (4) ருவிந்து குணசேகர 35*ஓய்வு


கடற்படை அணி – 64/5 (5) தினுஷ்க மாலன் 36*ஓய்வு, தரிந்து கௌஷல் 3/09

NCC – 49/5 (5) A.பெரேரா 31* ஓய்வு


பதுரலிய SC – 64/4 (5) சாலிய சமன் 30 *, இஷான் ஜயரத்ன 2/02

கோல்ட்ஸ் – 66/0 (4.1) சதீர சமரவிக்கிரம 35* ஓய்வு, இஷான் ஜயரத்ன 24*

கால் இறுதிப் போட்டிகள்

BRC -79/3 (5) ஆண்டி சொலமன் 28, ரொமேஷ் புத்திக 26*

CCC – 73/3 (5) வனிது ஹசரங்க 31ஓய்வு, அஷான் ப்ரியஞ்சன் 31ஓய்வு


SSC -102/2 (5) தனுஷ்க குணதிலக 34ஓய்வு, சாமர கபுகெதற 28, சம்மு அஷான் 22 *

சிலாபம் மெரியன்ஸ் – 70/1 (5) இசுறு உதம் 32ஓய்வு


கடற்படை அணி – 62/3 (5) A. எறந்த 24

கோல்ட்ஸ் – 63/2 (4) சதீர சமரவிக்கிரம 32ஓய்வு, அமித் எறந்த 2/17


சோனகர் விளையாட்டுக் கழகம் – 66/2 (5) திலின துஷார 32ஓய்வு, ருவிந்து குணசேகர 31ஓய்வு

சராசின் விளையாட்டுக் கழகம் – 48/5 (5) உமேஷ் கருணாரத்ன 19, லஸ்ஸன பெரேரா 2/10