நியூசிலாந்து T20I தொடரிலிருந்து நீக்கப்பட்ட இந்திய வீரர்!

New Zealand tour of India 2023

69

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இந்திய அணியிலிருந்து ருதுராஜ் கைகவட் நீக்கப்பட்டுள்ளார்.

ருதுராஜ் கைகவட்டிற்கு மணிக்கப்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சைப்பெற்றுக்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்னா அணியை பந்துவீச்சில் மிரட்டிய விஷ்வ, அசித

ரஞ்சி கிண்ணத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடியதன் பின்னர், மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதாக கைகவட் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற T20I தொடரின்போதும், ருதுராஜ் கைகவட்டிற்கு மணிக்கப்பட்டு பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது. எனவே குறித்த தொடரிலும் விளையாடவில்லை. அதேநேரம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரிலும் இவர் கொவிட்-19 தொற்று காரணமாக விளையாடவில்லை.

ருதுராஜ் கைகவட் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை தவறவிட்டாலும் மாற்று வீரர்கள் எவரையும் இந்திய கிரிக்கெட் சபை அறிவிக்கவில்லை. ஏற்கனவே அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பிரித்திவி ஷோ இணைக்கப்பட்டுள்ளார். எனவே இந்த தொடரில் பிரித்திவி ஷோ விளையாடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டி இன்று வெள்ளிக்கிழமை (27) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<