டி-20 உலகக் கிண்ண ஆரம்ப கட்டம் இலங்கைக்கு எவ்வாறு இருக்கும்?

81
 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 16 நாட்கள், 51 போட்டிகளுக்கு பின் 2020 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கான உலகத் தகுதிகாண் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (02) நிறைவடைந்தது. இந்த தொடரில் மூன்றாவது முறையாகவும் நெதர்லாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றது. 

இந்தத் தொடர் என்ன?

அவுஸ்திரேலியாவில் 2020 நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் .சி.சி. டி-20 உலகக் கிண்ண போட்டிக்கான தகுதிகாண் போட்டிகளின் கடைசிக் கட்டத் தொடராகவே 2019 .சி.சி. டி-20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் நடைபெறுகிறது.

T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் சம்பியனாக நெதர்லாந்து

T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான ……….

2020 .சி.சி. உலகக் கிண்ண போட்டிக்கான தகுதிகாண் ஆட்டங்கள் 2018 பெப்ரவரி 26ஆம் திகதி ஆர்ஜன்டீனாவின், புவனோஸ் ஏர்சிலேயே ஆரம்பமானது. அங்கு தென் அமெரிக்க துணைப் பிராந்தியத்திற்கான தகுதிகாண் போட்டிகள் நடைபெற்றன. 12 துணைப் பிராந்திய தகுதி பெற்றோரும் 5 பிராந்திய தகுதி பெற்றோரும் பின்னர், 8 (நமிபியா, கென்யா, நைஜீரியா, கனடா, பிருண்டே, சிங்கப்பூர், பப்புவா நியூகினி, ஜெர்சி) அணிகளாக சுருக்கப்பட்டன. ஆரம்பத்தில் 61 அணிகள் பங்கேற்ற நிலையிலேயே இவ்வாறு அணிகள் சுடுக்கப்பட்டன

இந்த அணிகளானது அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கொங் மற்றும் ஓமான் அணிகளுடன் சேர்த்து 14 அணிகள் கொண்ட தொடருக்கு இணைந்தன

இறுதியில் 10 நேரடி தெரிவு அணிகளுடன் (அப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள்) 2020 .சி.சி. டி-20 உலகக் கிண்ணத்திற்கு இந்த 14 அணிகளில் முதல் ஆறு இடங்களை பெற்ற அணிகள் தெரிவாயின.

ஜிம்பாப்வேயுக்கு என்ன ஆனது?

கடந்த சில மாதங்களில் குறுகிய காலத்திற்கு .சி.சியினால் தடை செய்யப்பட்டதை அடுத்து ஜிம்பாப்வேயுக்கு இந்தத் தொடரில் பங்கேற்க முடியாமல்போனது. ஜிம்பாப்வேயின் இடத்திற்கு நைஜீரிய அணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முழு அங்குத்துவ நாடான ஜிம்பாப்வே தவிர்த்து தற்போது ஒருநாள் சர்வதேச அந்தஸ்தை பெற்ற நேபாளம் மற்றும் அமெரிக்காவும் இந்தத் தொடரில் பங்கேற்காத ஏனைய அணிகளாகும்

அதற்குப் பின் என்ன?

14 அணிகள் பங்கேற்கும் தொடர் அதிக போட்டி கொண்ட பரபரப்பானது. உலகக் கிண்ண தகுதி மற்றும் நிதி அளிப்புகள் காரணமாகவும் இந்தப் போட்டிகள் முக்கியமாக இருந்தது

குழுநிலை முடிவுகள்

குழு B
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி நி.ஓ.வே.
அயர்லாந்து 6 4 2 8 1.591
ஓமான் 6 4 2 8 0.997
ஐக்கிய அரபு இராட்சியம் 6 4 2 8 0.682
ஹொங்கொங் 6 3 3 6 0.48
கனடா 6 3 3 6 0.24
ஜெர்சி 6 3 3 6 0.089
நைஜீரியா 6 0 6 0 –4.673
குழு A
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி நி.ஓ.வே.
பப்புவா நியூகினி 6 5 1 10 2.086
நெதர்லாந்து 6 5 1 10 1.776
 நமிபியா 6 4 2 8 1.08
ஸ்கொட்லாந்து 6 3 3 6 0.258
கென்யா 6 2 4 4 –1.156
சிங்கப்புர் 6 2 4 4 –1.375
பெர்முடா 6 0 6 0 –2.839

 

.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றவர்கள் யார்?

நெதர்லாந்து, பப்புவா நியூகினி, அயர்லாந்து, நமிபியா, ஸ்கொட்லாந்து, ஓமான்

(பப்புவா நியுகினி மற்றும் நமிபியா முதல் முறை டி-20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.) 

ஆக, இலங்கை ஏற்கனவே டி-20 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றுவிட்டது?

ஆம், ஆனால் மேலுள்ள அணிகளுடன் .சி.சி. டி-20 உலகக் கிண்ண முதல் சுற்றில் இலங்கை ஆட வேண்டும். தகுதி பெற்ற 6 அணிகள் மற்றும் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் அடுத்த சுற்றுக்கான 4 இடங்களுக்காக போட்டியிடவுள்ளன. அந்த நான்கு அணிகளும் ஏற்கனவே நேரடி தகுதி பெற்ற 8 அணிகளுடன் சுப்பர் 12 சுற்றில் இணையும்

T10 லீக் கிரிக்கெட் தொடரில் மற்றுமொரு இலங்கை வீரர்

இந்த மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அரபு ……..

இந்த முதல் சுற்றில் இலங்கை அணி பப்புவா நியுகினி, அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகளுடன் மோதவிருப்பதோடு பங்களாதேஷ் அணி நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நமிபிய அணிகள் இருக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.  

இலங்கை அணியின் முதல் சுற்று போட்டிகள்

  • எதிர் அயர்லாந்துஒக்டோபர் 18, கீலொங்
  • எதிர் பப்புவா நியுகினிஒப்டோபர் 20, கீலொங்
  • எதிர் ஓமான்ஒக்டோபர் 22, கீலொங்   

முதல் சுற்று இலங்கை அணிக்கு இலகுவாக இருக்குமா?

இல்லை!

அனைத்து அணிகளிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் தமது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். இரண்டு நாட்கள் மோசமாக ஆடிவிட்டால் தொடரில் இருந்தே வெளியேறும் ஆபத்து உள்ளது. இந்த மூன்று அணிகளும் பல சவால்களையும், வாழ்வா சாவா நிலைகளையும் சந்தித்தே இந்த இடத்திற்கு வந்துள்ள

இலங்கை அவ்வாறான ஒரு சூழலை எதிர்கொள்ளவில்லை. அண்மையில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வெளிப்படுத்திய மோசமான ஆட்டம் இந்த அணிகளுக்கு ஊக்கத்தை ஏற்பத்தி இருக்கும். போல் ஸ்டர்லிங் மற்றும் கெவின் பிரைன் போன்ற அதிரடி வீரர்களை கொண்ட ஒரு வலுவாக அணியாகவே அயர்லாந்து உள்ளது

டி-20 இல் இந்தியாவை முதல் முறை வீழ்த்தியது பங்களாதேஷ்

முஷ்பீகுர் ரஹீமின் அபார துடுப்பாட்டத்தின் ……

புது அணியான பப்புவா நியுகினி உலகின் சிறந்த களத்தடுப்பு அணிகளில் ஒன்றாக உள்ளது. அந்த அணி உலக தகுதிகாண் போட்டிகளில் தரமான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியது. நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து போன்ற வலுவான அணிகளைக் கூட அது வீழ்த்தியது

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடர்களில் ஆடியிருக்கும் பப்புவா நியூகினிக்கு அந்நாட்டு சூழல் பழக்கப்பட்டது. நோர்மான் வானுவா, டோனி உரா மற்றும் அணித்தலைவர் அசாத் வாலா போன்றவர்கள் ஒருசில ஓவர்களில் எதிரணியை முறியடித்து ஆட்டத்தை தம் பக்கம் திசை திருப்பக் கூடியவர்கள்

இந்தக் குழுவில் இருக்கும் நான்காவது அணியான ஓமான் இலங்கை அணியின் முன்னால் வீரர் துலிப் மெண்டீஸ் பயிற்சியின் கீழ் ஆடுகிறது. சர்வதேச போட்டிகளில் அந்த அணி குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அணி அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் தாக்கம் செலுத்தக் கூடிய பிலால் கான் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.    

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<