பிரேசிலிற்குப் புதிய பயிற்சியாளர் நியமனம்

167
Tite

கோபா அமெரிக்கா நூற்றாண்டு கால்பந்து தொடரில் பிரேசில் அணி முதல் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணியின் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டார்

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் தொடங்கி சரியாக நூறு ஆண்டுகள் ஆகிறது. இதனால் இதை சிறப்பாகக் கொண்டாட இந்த வருடம் நூற்றாண்டு கோபா அமெரிக்க தொடர் நடத்தப்பட்டுவருகிறது.

இதில், கால்பந்து ஆட்டத்தில் சிறந்த விளங்கும் பிரேசில் அணி தனது முதல் போட்டியில் ஈகுவடார் உடன் மோதியது. இந்த ஆட்டம் 0-0 என சமநிலையில் முடிந்தது. 2ஆவது போட்டியில் ஹைதியை 7-1 என வீழ்த்தியது. ஆனால், பேருவுடன் மோதிய போட்டியில் 0-1 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. இத்துடன் லீக் போட்டியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இந்தத் தோல்வி பெரிய அவமானம் என்று பிரேசில் கருதியது. இதற்கு முதல்படியாக பிரேசில் கால்பந்து சம்மேளனம் அதிரடியாகப் பயிற்சியாளர் துங்காவை நீக்கியது. தற்போது அவருக்குப் பதிலாக 55 வயதாகும் டைட் என்பவரை நியமிக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதியில் ஜெர்மனி 7-1 என பிரேசிலை துவம்சம் செய்தது. இதனால் அந்த அணியின் பயிற்சியாளர் நீக்கப்பட்டு துங்கா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

துங்கா சரியாக 2 வருடங்கள் பயிற்சியாளராக இருந்த நிலையில் தற்போது அந்தப் பதவியை விட்டு விலக வேண்டிய நிலையில் உள்ளது.

டைட்டை அதிகாரபூர்வமாக பயிற்சியாளராக அறிவிக்கவில்லை என்றாலும், பிரேசில் கால்பந்து சம்மேளனம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அவரும் பிரேசிலின் அழைப்பை ஏற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரேசில் அணியின் பயிற்சியாளர் தற்போது மாற்றப்பட்டுள்ளதால் ஒலிம்பிக்கில் அந்த அணியின் செயற்பாடு எப்படி இருக்கும் என்பது சந்தேகமே?.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்