தவறுகளை திருத்தி பலமான அணியாக மாலைத்தீவுகளை எதிர்கொள்வோம் : பகீர் அலி

338

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 2018ஆம் ஆண்டுக்கான சாப் சுசுகி கிண்ணத்தில் தங்களுடைய முதல் குழுநிலைப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட இலங்கை கால்பந்து அணி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

SAFF முதல் மோதலில் பலம் மிக்க இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை

பங்களாதேஷின் பங்கபந்து தேசிய அரங்கில் இடம்பெற்ற..

முக்கியமாக இந்த போட்டியில் இலங்கை வீரர்கள் களத்தில் விட்ட சில தவறுகளலே தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தது. அத்துடன் இந்தியாவின் இளம் வீரர்களுடனான அணி களமிறக்கப்பட்ட போதும், இலங்கை அணியால் வெற்றியை நெருங்க முடியவில்லை.

இந்த நிலையில் அணியின் தோல்வி குறித்து, ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு  இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நிசாம் பகீர் அலி பதிலளித்துள்ளார்.

கேள்வி: இந்த போட்டி குறித்து உங்களுடைய நிலைப்பாடு?

உண்மையாக கூறுவதாயின் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. இந்தியா போன்ற அணியுடன் விளையாடுவதால் சற்று பதற்றத்துடன் விளையாடினர். தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த தவறிவிட்டனர். எனினும், எமக்கு இன்னுமொரு வாய்ப்பிருக்கிறது. அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட எதிர்பார்க்கிறோம்

கேள்வி: அடுத்தப் போட்டியில் வெற்றிபெற்றால் அரையறுதிக்கு தகுதிபெற முடியுமா?

ஆம். எமக்கு வாய்ப்புள்ளது.

கேள்வி: எதிர்வரும் போட்டியில் அணியில் மாற்றங்கள் ஏற்படுமா? அணித் தலைவர் ஏன் முதல் பாதியிலேயே மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்?

அணித் தலைவரின் உடற்தகுதி குறைவாக இருந்தது. அதனால்தான் அவர் விளையாடவில்லை. அணித் தலைவர் அல்லது ஏனைய வீரராக இருந்தாலும் அழுத்தத்துடன் போட்டியில் விளையாட முடியாது. எனவே, அவரை நீக்கி அணியில் மாற்றங்களை ஏற்படுத்தினோம்.

நாம் தற்போது தவறுகளை அறிந்துள்ளோம். அடுத்தப் போட்டியில் அதனை சரிசெய்து விளையாடுவோம். வீரர்கள் எதிர்வரும் போட்டியில் சிறப்பாக செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியா போன்ற அணியுடன் விளையாடும் போது அதிக உணர்ச்சிவசப்பட நேரிடும். அவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அதுமாத்திரமின்றி சுமார் ஒருவருட காலமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

கேள்வி: இளம் அணியாக இந்திய அணி களமிறங்கியது. ஆனால் இலங்கை இந்த போட்டித் தொடருக்காக நன்கு பயிற்சிகளை மேற்கொண்டும் ஏன் வெற்றிபெற முடியவில்லை?

இந்திய அணி இளம் வீரர்களை கொண்ட அணியாக இருந்தாலும், அவர்களுக்கு அனுபவம் அதிகம். ISL போட்டித் தொடரில் விளையாடி வருகின்றனர். 19 மற்றும் 23 வயதுக்குட்பட் வீரர்கள் ISL தொடரில் விளையாடுகின்றனர். இதனால் அவர்களுக்கான போட்டிகளில் விளையாடும் அனுபவம் அதிகமாக உள்ளது

பிஃபா சிறந்த வீரர் விருதுக்கு ரொனால்டோ, மொட்ரிக், சலாஹ் போட்டி

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், 2018 பிஃபா…

கேள்வி: எமது அணியின் கோல் காப்பாளர் அதிக தவறுகளை விட்டார். அத்துடன் நேரத்தை கடத்த முற்பட்டதற்காக நடுவரால் மஞ்சல் அட்டையும் வழங்கப்பட்டது. இதனால் அவர் அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா?

ஒரு கோல் அடிக்க வேண்டுமானால் 10 வீரர்களை தாண்டிதான் கோல் காப்பாளரிடம் பந்து வருகிறது. இதனால் அனைவரையும் நாம் குறைகூற முடியாது. இரண்டாவது கோலானது, கோல் காப்பாளரின் தவறுதான். அத்துடன் மஞ்சல் அட்டை பெற்றதும் தேவையில்லாத ஒன்றுதான். எனினும், இந்த செயற்பாடுகள் அணியையும், கோல் காப்பாளரையும் எந்தவிதத்திலும் பாதிக்காது

கேள்வி: கோல் காப்பாளர் மாலைத்தீவுகளில் உள்ளூர் கழகங்ளுக்கான தொடரில் விளையாடி வருகிறார். இதனால் அடுத்த போட்டியில் அவர் சிக்கல்களை எதிர்கொள்வாரா?

எந்த பிரச்சினைகளும் இல்லை. மாலைத்தீவுகளை எதிர்கொள்வது அவருக்கு கடினம்தான். ஆனால் அவர் நாட்டுக்காக விளையாடுகின்றார். மாலைத்தீவுகள் கழகத்துக்காக விளையாடுகிறார் என்பதால் அந்த நாட்டுக்கு அவர் ஆதரவு வழங்க மாட்டார். குறித்த போட்டி அவரது எதிர்காலத்தை பிரகாசப்படுத்தும்

கேள்வி: மாலைத்தீவுகளை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள் என்ன? மாற்றங்கள் ஏதாவது இருக்கிறதா?

மாலைத்தீவுகள் அணியை நாம் வெற்றிக்கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை. எமது முன்கள வீரர்கள் தங்களது நகர்வை ஒழுங்காக பூர்த்தி செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல் பந்து பரிமாற்றங்களிலும் பிரச்சினைகள் இருந்தது. மாலைத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் தவறுகளை திருத்திக்கொள்வோம்என்றார்.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<