கொவிட் தொற்றினால் பிரதியீடு செய்யப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர்

183

நியூசிலாந்தின் “ப்ளன்கட் சீல்ட்” கிரிக்கெட் தொடர், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக வீரர் ஒருவரினை பிரதியீடு செய்த உலகின் முதல் கிரிக்கெட் தொடராக மாறியிருக்கின்றது.

>>கண்டி டஸ்கர்ஸ் அணியை வாங்கிய சல்மான் கான் குடும்பம்

கொவிட்-19 வைரஸ் தொற்று உலகில் ஏற்பட்டதன் பின்னர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தடைப்பட்டிருந்தன. எனினும், நிலைமைகள் சற்று சீராக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) கிரிக்கெட் போட்டிகளை மீள நடாத்தும் சந்தர்ப்பங்களில் சில கட்டுப்பாடுகளை கடந்த ஜூன் மாதம் விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளில் ஒன்று (குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில்) கொவிட் தொற்று ஏற்பட்டததாக சந்தேகிக்கப்படும் வீரர் ஒருவரினை பிரதியீடு செய்யும் விடயமாகும்.

இந்த விடயத்திற்கு அமையவே, நியூசிலாந்தின் முதல்தரக் கிரிக்கெட் தொடரான ப்ளன்கட் சீல்ட் தொடரில் வீரர் ஒருவர் கொவிட் தொற்று என சந்தேகிக்கப்பட்டு மற்றுமொரு வீரரனினால் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றார்.

அந்தவகையில் கொவிட் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் வீரரின் பெயர் மார்க் சப்மன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, ஓக்லன்ட் அணிக்காக ஆடி வந்த அவர் ஒடாகோ அணிக்கு எதிரான மோதலின் போது நோய் அறிகுறிகள் தோன்றியதன் காரணமாக, பென் லிஸ்டர் என்னும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் மூலம் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றார்.

>>IPLல் இல் புது வரலாறு படைத்தார் தவான்!

அதேநேரம், தற்போது கொவிட்-19 தொற்று பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்திருக்கும் மார்க் சப்மன், பரிசோதனைகளின் போது கொவிட் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஓக்லன்ட் அணியின் முதல் பதினொருவர் அணியில் அவருக்கு மீண்டும் இணைய முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<