BCCI இன் மூன்று மாத தடைக்கு உள்ளான ரிங்கு சிங்

78
IndiaTV

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு லீக் தொடரில் விளையாடிய காரணத்தினால் மூன்று மாதங்களுக்கு தடைக்குள்ளாகியுள்ள இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்  இலங்கை A அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை விளையாடுகின்ற ஒவ்வொரு நாட்டு வீரர்களுக்கும் அந்த அந்த நாடுகளினுடைய கிரிக்கெட் சபைகள் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது. அதிலும்   வீரர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஒரு கிரிக்கெட் சபையாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை காணப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகளின் வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்

This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of….

அபுதாபியில் ‘ரமழான் டி20 லீக் தொடர்’ என்ற பெயரில் இம்மாத ஆரம்பத்தில் நடாத்தப்பட்ட லீக் தொடரில் டெக்கான் கிலாடியேடர்ஸ் அணிக்காக ரிங்கு சிங் விளையாடியிருந்தார். குறித்த போட்டியில் இவர் 58 பந்துகளுக்கு முகங்கொடுத்து சதமடித்து 104 ஓட்டங்களையும், இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

அண்மையில் நிறைவுக்கு வந்திருந்த இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்த ரிங்கு சிங், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினுடைய அனுமதியை பெறாமல் அங்கீகாரம் பெறாத டி20 லீக் தொடரில் விளையாடியுள்ளார்.

1997 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பிறந்த ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினுடைய அனுமதியை பெறாமல் கிரிக்கெட் சபையினுடைய விதிகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் மூன்று மாதங்கள் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத வகையில் இவ்வாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் தடைக்கு முகங்கொடுத்துள்ளார்.

21 வயதுடைய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரும் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளருமான ரிங்கு சிங், கிங்ஸ் இலவன் பஞ்சாப், உத்தர பிரதேஷ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் உத்தர பிரதேஷ் இளையோர் அணி போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை A அணியுடனான டெஸ்ட் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்தார்.

இவருக்கான தடையானது ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அதாவது நாளையிலிருந்து அமுலுக்குவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை A அணியுடனான நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (31) ஆரம்பமாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் (30) இவரது பிழை கண்டுபிடிக்கப்பட்டதனால் இந்திய A அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார்.

பந்துவீச்சில் சோபித்த இலங்கை A அணி துடுப்பாட்டத்தில் தடுமாற்றம்

இந்திய A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை….

இந்த விடயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் பதிவு செய்துள்ள ஒரு வீரர் அச்சபையினுடைய அனுமதி இல்லாமல், மேலும் தடையில்லாத சான்று பெறாமல் வெளிநாட்டு போட்டித்தொடரில் விளையாடுவது அனுமதிக்கப்படாத ஒன்றாகும். ஆனால் ரிங்கு சிங் அதனை பொருட்படுத்தாது அபுதாபி சென்று விளையாடியுள்ளார்.’

‘இதன் காரணமாக ரிங்கு சிங் உடனடியாக மூன்று மாதங்கள் அமுலுக்கு வரும் வகையில் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து இடைக்கால தடைக்கு உள்ளாகின்றார். அத்துடன் இலங்கை A அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்தும் ரிங்கு சிங் நீக்கப்படுகின்றார்.’

மேலும் ‘இதுபோன்ற ஒழுங்கீனங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி நடந்த எந்தவொரு வீரரும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை அவர்கள் மீது மேற்கொள்ளப்படும். மேலும் இதுபோன்ற செயற்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஏற்றுக்கொள்ளாது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<