IPL தொடரின் போட்டி அட்டவணை வெளியானது!

152
IPLT20.COM

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடருக்கான போட்டி அட்டவணையை, இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, அடுத்தமாதம் 9ம் திகதி ஆரம்பிக்கும் ஐ.பி.எல். தொடர் மே 30ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரின்  போட்டிகள் பொதுவான மைதானங்களில் நடைபெறவுள்ளன. குறிப்பாக ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய சொந்த மைதானத்தில் ஆடுவதற்கு பதிலாக, பொதுவான மைதானங்களில் விளையாடவுள்ளன.

T20I தொடர் வெற்றியை மயிரிழையில் தவறவிட்ட இலங்கை

இதற்காக ஐ.பி.எல். நிர்வாகம் ஐந்து முக்கிய மைதானங்களை தெரிவுசெய்துள்ளது. இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அஹமதாபாத்  மைதானம், பெங்களூர், சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மைதானங்களில் ஐ.பி.எல். தொடரின் அனைத்து போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளதுடன், ப்ளே ஓஃப் மற்றும் இறுதிப்போட்டி என்பன உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

மொத்தமாக 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், ஒவ்வொரு அணியும் லீக் போட்டிகளை நான்கு மைதானங்களில் விளையாடவுள்ளன. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் மைதானங்களில் தலா 10 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அஹமதாபாத் மற்றும் டெல்லி மைதானங்களில் தலா 8 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதன்முறையாக ஐ.பி.எல். அணிகள் தங்களுடைய சொந்த மைதானங்களில் விளையாடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெற்றிகரமாக நடத்திய நம்பிக்கையுடன், இவ்வருட ஐ.பி.எல். தொடரை சொந்த மண்ணில் அதீத சுகாதார பாதுகாப்புடன் நடத்த முடியும் என இந்திய கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

போட்டி அட்டவணை இதோ!

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<