இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் அணி

Afghanistan tour of Sri Lanka 2023

524

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி ஜூன் 2, 4 மற்றும் 7ம் திகதிகளில் போட்டிகளில் விளையாடவுள்ளது.

சூதாட்டம் தொடர்பாக இந்திய வீரர் பரபரப்பு புகார்

இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடர் உறுதிசெய்யப்பட்டுள்ள போதும், மைதானங்களை இலங்கை கிரிக்கெட் சபை உறுதிசெய்யவில்லை. அதேநேரம் போட்டித் தொடருக்கான தொலைக்காட்சி மற்றும் வானொலி உரிமங்களையும் இலங்கை கிரிக்கெட் சபை கோரி வருகின்றது.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐசிசி சுபர் லீக்கிற்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தது. குறிப்பிட்ட இந்த தொடரானது 1-1 என சமனிலையடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<