ரஷீதின் சுழலுக்கு தடுமாறிய பங்களாதேஷ் அணி ஆப்கானிடம் தோல்வி

819

பதின்ம வயது சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானின் மற்றொரு அபார பந்துவீச்சு மூலம் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷுக்கு எதிராக தனது முதல் டி-20 சர்வதேச வெற்றியை பெற்றது.

ரஷீத் கானை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் : ஆப்கான் அதிபர்

ஏபி.டி.வில்லியர்ஸாக சில நிமிடங்கள் மாறிய ரஷீத்..

இந்தியாவுக்கு வரலாற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி டெஹ்ராடுனில் ஞாயிற்றுக்கிழமை (3) நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் ஆப்கான் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

.பி.எல் மற்றும் பிக் பாஷ் தொடர்களில் திறமையை வெளிக்காட்டிய 19 வயதுடைய ரஷீத் கான் தான் வீசிய முதல் இரண்டு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி மொத்தம் மூன்று விக்கெட்டுகளை பதம்பார்த்ததன் மூலம் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்கை எட்டுவது கடினமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். எனினும் ஆப்கான் அணியின் ஆரம்ப வீரரான விக்கெட் காப்பாளர் மொஹமது ஷஹ்ஸாத் 37 பந்துகளில் 40 ஓட்டங்களை விளாசி ஆரம்பத்தில் ஓட்டங்களை அதிகரித்ததோடு மத்திய, பின் வரிசையில் சமியுல்லாஹ் ஷன்வாரி 18 பந்துகளில் 36 ஓட்டங்களையும், ஷபிகுல்லாஹ் 8 பந்துகளில் 24 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின்..

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. தமிம் இக்பால் டக் அவுட் ஆன நிலையில் மறுமுனை ஆரம்ப வீரர் லிடோன் தாஸ் நின்று பிடித்து ஓட்டங்களை அதிகரிக்க முயன்றார். எனினும் 30 ஓட்டங்களை பெற்றிருந்தபோதும் அவர் முஹமது நபியின் பந்துக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

மத்திய வரிசையில் முஷ்பிகுர் ரஹிம் பெறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் பந்துவீச வந்த ரஷீத் கான் அவரையும் அடுத்து வந்த சபிர் ரஹ்மானையும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். இந்நிலையில் மஹ்மூதுல்லாஹ் கடைசி நேரத்தில் போராடியபோதும் அவரும் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியில் பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கே சுருண்டது. ரஷீத் கான் தனது 3 ஓவர்களுக்கும் 13 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் சத்ரானும் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.   

மேற்கிந்திய தீவுகளில் இலங்கை அணிடன் இணையும் தனஞ்சய

இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில்…

இதன்மூலம் ஆப்கான் அணி பங்களாதேஷை டி-20 சர்வதேச போட்டிகளில் முதல்முறை வீழ்த்தியதோடு அந்த அணி டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பெற்றது.

ஆப்கான் அணி தனது சொந்த போட்டித் தொடராகவே இந்தியாவில் பங்களாதேஷுடனான டி-20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி செவ்வாய்க்கிழமை (5) நடைபெறவுள்ளது.

இந்த தொடரை அடுத்து ஆப்கான் அணி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி வரும் ஜுன் 14 ஆம் திகதி பெங்களுருவில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 167/8 (20) – மொஹமது ஷஹ்சாத் 40, சமியுல்லாஹ் ஷன்வாரி 36, உஸ்மான் கானி 26, அஸ்கார் ஸ்டனிக்சாய் 25, மஹ்மூதுல்லாஹ் 2/1, அபுல் ஹஸன் 2/40

பங்களாதேஷ் – 122 (19) – லிடோன் தாஸ் 30, மஹ்மூதுல்லாஹ் 29, முஷ்பிகுர் ரஹிம் 20, ரஷீத் கான் 3/13, ஷபூர் சத்ரான் 3/40, முஹமது நபி 2/21

முடிவு ஆப்கானிஸ்தான் 45 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<