டெஸ்ட் கிரிக்கெட்டில் 82 வருடகால சாதனையை முறியடித்த யசீர் ஷா

293
Image Courtesy - AP

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சின் மூலமாக எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த பாகிஸ்தான் அணியின் யசீர் ஷா, டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற 82 வருடகால சாதனையை முறியடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த ஹபீஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிராக அபுதாபியில் …

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யசீர் ஷா 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் வில்லியம் சொமர்வில்லியின் விக்கெட்டினை வீழ்த்தியதன் ஊடாக யசீர் ஷா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

யசீர் ஷா 33 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதுடன், அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கிளேரி க்ரிமெட் வைத்திருந்த 82 வருடகால சாதனையையும் முறியடித்துள்ளார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான கிளேரி க்ரிமெட், டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு 36 போட்டிகளை எடுத்துக்கொண்ட நிலையில், யசீர் ஷா 33 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

அத்துடன், 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு யசீர் ஷா, நான்கு வருடங்கள் மற்றும் 42 நாட்களை எடுத்துக்கொண்டுள்ள நிலையில்,  இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் இயன் போத்தம் 4 வருடங்கள் 30 நாட்களை எடுத்துக்கொண்டு, யசீர் ஷாவை விட 12 நாட்கள் முன்னிலையில் உள்ளார்.

அதேநேரம், பாகிஸ்தான் அணிசார்பில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அதிக விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் யசீர் ஷா தவறவிட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அப்துல் காதீர் 1987/88 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பெற்றிருந்தார். இவர் 6 இன்னிங்ஸ்களில் 30 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.  

யாசிர் ஷாஹ்வின் மாய சுழலில் வீழ்ந்தது நியூஸிலாந்து அணி

கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான பாகிஸ்தான்…

எனினும்,  பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இன்னிங்ஸை இடை நிறுத்திக்கொண்டதால், யசீர் ஷாவினால் இந்த சாதனையை எட்ட முடியாமல் போனது. யசீர் ஷா மொத்தமாக இந்த தொடரில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி, முன்னாள் வீரர் வக்கார் யூனிஸுடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் யசீர் ஷா முதலிடத்தை பிடித்துள்ளதுடன், இரண்டாவது இடத்தை கிளேரி க்ரிமெட் (அவுஸ்திரேலியா) இரண்டாவது இடத்தையும், இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் (37 போட்டிகள்) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.