இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் அணி விளையாடவுள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 17ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
>>7 வருடங்களின் இந்தியாவினை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய மகளிர்<<
இதில் முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 2, 5 மற்றும் 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் ஜூலை 10, 13 மற்றும் 16ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், மூன்றாவது போட்டி மற்றும் முதல் T20I போட்டி என்பன பல்லேகலையில் நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து இரண்டாவது T20I போட்டி தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், மூன்றாவது T20I போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
போட்டி அட்டவணை
முதல் டெஸ்ட் – ஜூன் 17–21 (காலி)
இரண்டாவது டெஸ்ட் – ஜூன் 25-29 (எஸ்.எஸ்.சி)
முதல் ஒருநாள் – ஜூலை 2 (ஆர்.பிரேமதாஸ)
இரண்டாவது ஒருநாள் – ஜூலை 5 (ஆர்.பிரேமதாஸ)
மூன்றாவது ஒருநாள் – ஜூலை 8 (பல்லேகலை)
முதல் T20I – ஜூலை 10 (பல்லேகலை)
இரண்டாவது T20I – ஜூலை 13 (தம்புள்ள)
மூன்றாவது T20I – ஜூலை 16 (ஆர்.பிரேமதாஸ)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<