சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் இலங்கைப் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்துடன் முடிவடைந்துள்ளது.
>>இரண்டாவது டெஸ்டிற்கான இலங்கை குழாத்தில் இரு மாற்றங்கள்!<<
கொழும்பு SSC மைதானத்தில் முன்னதாக ஆரம்பமாகிய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலை அடைந்திருக்க இரு அணிகளும் தொடரினைக் கைப்பற்ற கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது போட்டிக்காக இலங்கை இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தன.
அதன்படி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற அஞ்செலொ மெதிவ்ஸின் இடத்தினை சொனால் தினுஷ அறிமுக வீரராக நிரப்ப, விஷ்வ பெர்னாண்டோ மிலான் ரத்நாயக்கவின் இடத்தினை எடுத்திருந்தார். மறுமுனையில் பங்களாதேஷ் குழாத்தில் மெஹிதி ஹஸன் மற்றும் இபடொட் ஹொசைன் ஆகியோர் இப்போட்டிக்காக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை XI
பெதும் நிஸ்ஸங்க, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், சொனால் தினுஷ, கமிந்து மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், விஷ்வ பெர்னாண்டோ, தரிந்து ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ
பங்களாதேஷ் XI
நஜ்முல் ஹொசைன் ஷன்டோ (தலைவர்), சட்மன் இஸ்லாம், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், முஸ்பிகுர் ரஹீம், லிடன் தாஸ், மெஹிதி ஹஸன், தய்ஜூல் இஸ்லாம், இபடொட் ஹொசைன், நஹிட் ரனா, நயீம் ஹசன்
தொடர்ந்து போட்டியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பங்களாதேஷ் மந்தகதியிலேயே ஓட்டக்குவிப்பில் ஈடுபடத் தொடங்கினர். பங்களாதேஷ் முதல் நாளின் முதல் பாதியில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.
>>2ஆவது டெஸ்ட்டை பார்வையிட இலவச அனுமதி<<
அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த அனாமுல் ஹக் ஓட்டமின்றி ஓய்வறை நடக்க அனுபவ வீரர் மொமினுல் ஹக்கின் விக்கெட்டும் அவர் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பறிபோனது.
போட்டியில் மழையின் குறுக்கீடு காணப்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு தொடர்ந்ததோடு, தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கைப்பந்துவீச்சாளர்கள் பங்களாதேஷிற்கு நெருக்கடி வழங்கினர்.
குறிப்பாக இன்றைய டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சொனால் தினுஷ சிறப்பான முறையில் பந்துவீசியதோடு, இது முதல் நாள் போட்டியின் மூன்றாம் இடைவெளியினையும் இலங்கை கைப்பற்ற காரணமாகியது.
அதன்படி மழையின் தாமதத்தின் காரணமாக 71 ஓவர்களே வீசப்பட்ட முதல்நாள் ஆட்டநிறைவில் பங்களாதேஷ் 8 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. பங்களாதேஷ் தரப்பில் இன்று அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்ற வீரராக ஷட்மன் இஸ்லாம் 46 ஓட்டங்களுடன் மாறினார்.
இலங்கை பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ, விஷ்வ பெர்னான்டோ மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shadman Islam | c Dhananjaya de Silva b Tharindu Rathnayake | 46 | 93 | 7 | 0 | 49.46 |
Anamul Haque | b Asitha Fernando | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Mominul Haque | c Pawan Rathnayake b Dhananjaya de Silva | 21 | 39 | 3 | 0 | 53.85 |
Najmul Hossain Shanto | c Kusal Mendis b Vishwa Fernando | 8 | 31 | 0 | 0 | 25.81 |
Mushfiqur Rahim | c Vishwa Fernando b Sonal Dinusha | 35 | 75 | 5 | 0 | 46.67 |
Liton Das | c Kusal Mendis b Sonal Dinusha | 34 | 56 | 2 | 1 | 60.71 |
Mehidy Hasan Miraz | c Kamindu Mendis b Vishwa Fernando | 31 | 42 | 3 | 0 | 73.81 |
Nayeem Hasan | b Asitha Fernando | 25 | 51 | 2 | 0 | 49.02 |
Taijul Islam | c Dinesh Chandimal b Sonal Dinusha | 33 | 60 | 5 | 0 | 55.00 |
Ebadot Hossain | lbw b Asitha Fernando | 8 | 13 | 1 | 0 | 61.54 |
Nahid Rana | not out | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Extras | 6 (b 3 , lb 3 , nb 0, w 0, pen 0) |
Total | 247/10 (79.3 Overs, RR: 3.11) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 18 | 2 | 51 | 3 | 2.83 | |
Vishwa Fernando | 19 | 4 | 45 | 2 | 2.37 | |
Tharindu Rathnayake | 17 | 1 | 72 | 1 | 4.24 | |
Prabath Jayasuriya | 11 | 0 | 36 | 0 | 3.27 | |
Dhananjaya de Silva | 5 | 0 | 15 | 1 | 3.00 | |
Sonal Dinusha | 9.3 | 3 | 22 | 3 | 2.37 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Anamul Haque b Taijul Islam | 158 | 254 | 19 | 0 | 62.20 |
Lahiru Udara | lbw b Taijul Islam | 40 | 65 | 4 | 0 | 61.54 |
Dinesh Chandimal | c Liton Das b Nayeem Hasan | 93 | 153 | 10 | 1 | 60.78 |
Prabath Jayasuriya | c Mehidy Hasan Miraz b Nahid Rana | 10 | 39 | 1 | 0 | 25.64 |
Dhananjaya de Silva | lbw b Taijul Islam | 7 | 10 | 1 | 0 | 70.00 |
Kamindu Mendis | b Nayeem Hasan | 33 | 41 | 5 | 0 | 80.49 |
Kusal Mendis | run out (Ebadot Hossain) | 84 | 87 | 8 | 2 | 96.55 |
Sonal Dinusha | b Nayeem Hasan | 11 | 16 | 1 | 0 | 68.75 |
Tharindu Rathnayake | c Anamul Haque b Taijul Islam | 10 | 20 | 0 | 1 | 50.00 |
Vishwa Fernando | not out | 2 | 13 | 0 | 0 | 15.38 |
Asitha Fernando | c Shadman Islam b Taijul Islam | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 10 (b 4 , lb 4 , nb 1, w 1, pen 0) |
Total | 458/10 (116.5 Overs, RR: 3.92) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ebadot Hossain | 14 | 0 | 55 | 0 | 3.93 | |
Taijul Islam | 42.5 | 4 | 130 | 5 | 3.06 | |
Nahid Rana | 20 | 1 | 94 | 1 | 4.70 | |
Mehidy Hasan Miraz | 20 | 1 | 75 | 0 | 3.75 | |
Nayeem Hasan | 18 | 4 | 87 | 3 | 4.83 | |
Mominul Haque | 2 | 0 | 8 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shadman Islam | c Lahiru Udara b Prabath Jayasuriya | 12 | 24 | 2 | 0 | 50.00 |
Anamul Haque | c Pawan Rathnayake b Asitha Fernando | 19 | 19 | 2 | 1 | 100.00 |
Mominul Haque | c Kamindu Mendis b Dhananjaya de Silva | 15 | 33 | 2 | 0 | 45.45 |
Najmul Hossain Shanto | lbw b Dhananjaya de Silva | 19 | 48 | 1 | 1 | 39.58 |
Mushfiqur Rahim | b Prabath Jayasuriya | 26 | 53 | 2 | 0 | 49.06 |
Liton Das | c Kusal Mendis b Prabath Jayasuriya | 14 | 43 | 0 | 0 | 32.56 |
Mehidy Hasan Miraz | lbw b Tharindu Rathnayake | 11 | 16 | 1 | 0 | 68.75 |
Nayeem Hasan | st Kusal Mendis b Prabath Jayasuriya | 5 | 8 | 0 | 0 | 62.50 |
Taijul Islam | c & b Prabath Jayasuriya | 6 | 15 | 0 | 0 | 40.00 |
Ebadot Hossain | lbw b Tharindu Rathnayake | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Nahid Rana | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 133/10 (44.2 Overs, RR: 3) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 8 | 1 | 22 | 1 | 2.75 | |
Vishwa Fernando | 6 | 3 | 16 | 0 | 2.67 | |
Prabath Jayasuriya | 18 | 2 | 56 | 5 | 3.11 | |
Dhananjaya de Silva | 4 | 1 | 13 | 2 | 3.25 | |
Sonal Dinusha | 3 | 1 | 7 | 0 | 2.33 | |
Tharindu Rathnayake | 5.2 | 0 | 19 | 2 | 3.65 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<