பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை கிரிக்கெட் அணியானது பெதும் நிஸ்ஸங்கவின் சிறந்த துடுப்பாட்டத்துடன் முன்னேறியிருக்கின்றது.
>> 2026 மகளிர் T20i உலகக் கிண்ண முதல் போட்டியில் ஆடும் இலங்கை
காலியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்திருந்த பங்களாதேஷ் அணியானது 484 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
இந்த நிலையில் இன்று (19) போட்டியின் மூன்றாம் நாளில் இன்னும் ஒரு விக்கெட் மாத்திரம் எஞ்சியிருக்க தமது முதல் இன்னிங்ஸில் முன்னேறிய பங்களாதேஷ் 153.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 495 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை எடுக்க, மிலான் ரத்நாயக்க மற்றும் தரிந்து ரத்நாயக்க தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணியின் வீரர்கள் ஆரம்ப அறிமுக வீரராக களமிறங்கிய லஹிரு உதாரவின் விக்கெட்டினை அவர் 29 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிகொடுத்தனர்.
எனினும் சிறந்த முறையில் இணைப்பாட்டம் உருவாக்கத் தொடங்கிய பெதும் நிஸ்ஸங்க – தினேஷ் சந்திமால் ஜோடி மேலதிக விக்கெட் இழப்பின்றி மூன்றாம் நாளின் மதிய போசணத்தினை அடைந்தனர். அதனையடுத்து தேநீர் இடவேளைக்கு முன்னதாக சந்திமால் – பெதும் நிஸ்ஸங்க ஜோடியின் இணைப்பாட்டம் நிறைவுக்கு வந்தது.
இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த தினேஷ் சந்திமால் தன்னுடைய 33ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 54 ஓட்டங்கள் பெற்றார்.
சந்திமாலின் பின்னர் தனது இறுதி டெஸ்டில் ஆடும் அஞ்செலோ மெதிவ்ஸ் புதிய வீரராக களம் வந்து 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் சதம் விளாசிய பெதும் நிஸ்ஸங்க இலங்கைத் தரப்பினை தொடர்ச்சியாகப் பலப்படுத்தியதோடு, மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வர சற்று முன்னர் தன்னுடைய கன்னி இரட்டைச் சதத்தினை நெருங்கிய நிலையில் ஹசன் மஹ்மூட்டின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். தன்னுடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸைப் பதிவு செய்த பெதும் நிஸ்ஸங்க 23 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 187 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> முஷ்பிகுர் – லிடன் அபாரம்; இரண்டாம் நாளில் இலங்கைக்கு ஆறுதல்
தொடர்ந்து பெதும் நிஸ்ஸங்கவின் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை அணியானது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் 93 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 368 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
இலங்கை பங்களாதேஷினை விட 127 ஓட்டங்கள் பின்தங்கியிருக்க களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்கள் பெற்றிருக்க, தனன்ஞய டி சில்வா 17 ஓட்டங்களுடன் உள்ளனர்.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shadman Islam | c Dhananjaya de Silva b Tharindu Rathnayake | 14 | 53 | 1 | 0 | 26.42 |
Anamul Haque | c Kusal Mendis b Asitha Fernando | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Mominul Haque | c Dhananjaya de Silva b Tharindu Rathnayake | 29 | 33 | 4 | 0 | 87.88 |
Najmul Hossain Shanto | c Angelo Mathews b Asitha Fernando | 148 | 279 | 15 | 1 | 53.05 |
Mushfiqur Rahim | lbw b Asitha Fernando | 163 | 350 | 9 | 0 | 46.57 |
Liton Das | c Kusal Mendis b Tharindu Rathnayake | 90 | 123 | 11 | 1 | 73.17 |
Jaker Ali | b Milan Rathnayake | 8 | 16 | 1 | 0 | 50.00 |
Nayeem Hasan | c Kusal Mendis b Milan Rathnayake | 11 | 30 | 1 | 0 | 36.67 |
Taijul Islam | b Milan Rathnayake | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Hasan Mahmud | not out | 7 | 15 | 1 | 0 | 46.67 |
Nahid Rana | c Kusal Mendis b Asitha Fernando | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Extras | 19 (b 8 , lb 5 , nb 2, w 4, pen 0) |
Total | 495/10 (153.4 Overs, RR: 3.22) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 29.4 | 5 | 86 | 4 | 2.93 | |
Milan Rathnayake | 23.4 | 6 | 39 | 3 | 1.67 | |
Tharindu Rathnayake | 49.2 | 3 | 196 | 3 | 3.98 | |
Prabath Jayasuriya | 48 | 2 | 154 | 0 | 3.21 | |
Dhananjaya de Silva | 3 | 0 | 7 | 0 | 2.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | b Hasan Mahmud | 187 | 256 | 23 | 1 | 73.05 |
Lahiru Udara | c & b Taijul Islam | 29 | 34 | 6 | 0 | 85.29 |
Dinesh Chandimal | c Shadman Islam b Nayeem Hasan | 54 | 119 | 4 | 0 | 45.38 |
Angelo Mathews | c Liton Das b Mominul Haque | 39 | 69 | 3 | 1 | 56.52 |
Kamindu Mendis | b Hasan Mahmud | 87 | 148 | 7 | 1 | 58.78 |
Dhananjaya de Silva | c Liton Das b Nayeem Hasan | 19 | 36 | 2 | 0 | 52.78 |
Kusal Mendis | c Liton Das b Hasan Mahmud | 5 | 17 | 1 | 0 | 29.41 |
Milan Rathnayake | b Nayeem Hasan | 39 | 83 | 3 | 1 | 46.99 |
Tharindu Rathnayake | b Nayeem Hasan | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Prabath Jayasuriya | not out | 11 | 13 | 0 | 0 | 84.62 |
Asitha Fernando | b Nayeem Hasan | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Extras | 11 (b 2 , lb 7 , nb 2, w 0, pen 0) |
Total | 485/10 (131.2 Overs, RR: 3.69) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Hasan Mahmud | 21 | 2 | 74 | 3 | 3.52 | |
Nahid Rana | 19 | 0 | 97 | 0 | 5.11 | |
Taijul Islam | 41 | 3 | 156 | 1 | 3.80 | |
Nayeem Hasan | 43.2 | 4 | 121 | 5 | 2.80 | |
Mominul Haque | 7 | 0 | 28 | 1 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shadman Islam | lbw b Milan Rathnayake | 76 | 126 | 7 | 0 | 60.32 |
Anamul Haque | c Kusal Mendis b Prabath Jayasuriya | 4 | 20 | 0 | 0 | 20.00 |
Mominul Haque | c Lahiru Udara b Tharindu Rathnayake | 14 | 40 | 0 | 1 | 35.00 |
Najmul Hossain Shanto | not out | 125 | 199 | 9 | 3 | 62.81 |
Mushfiqur Rahim | run out (Tharindu Rathnayake) | 49 | 102 | 4 | 0 | 48.04 |
Liton Das | b Tharindu Rathnayake | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Jaker Ali | st b | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Nayeem Hasan | not out | 7 | 23 | 0 | 0 | 30.43 |
Extras | 5 (b 4 , lb 1 , nb 0, w 0, pen 0) |
Total | 285/6 (87 Overs, RR: 3.28) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 8 | 0 | 31 | 0 | 3.88 | |
Prabath Jayasuriya | 29 | 3 | 92 | 1 | 3.17 | |
Tharindu Rathnayake | 29 | 1 | 102 | 3 | 3.52 | |
Milan Rathnayake | 12 | 4 | 26 | 1 | 2.17 | |
Dhananjaya de Silva | 8 | 0 | 27 | 0 | 3.38 | |
Kamindu Mendis | 1 | 0 | 2 | 0 | 2.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Najmul Hossain Shanto b Nayeem Hasan | 24 | 25 | 4 | 0 | 96.00 |
Lahiru Udara | st Liton Das b Taijul Islam | 9 | 13 | 2 | 0 | 69.23 |
Dinesh Chandimal | b Taijul Islam | 6 | 44 | 0 | 0 | 13.64 |
Angelo Mathews | c Mominul Haque b Taijul Islam | 8 | 45 | 1 | 0 | 17.78 |
Kamindu Mendis | not out | 12 | 35 | 1 | 0 | 34.29 |
Dhananjaya de Silva | not out | 12 | 30 | 1 | 1 | 40.00 |
Extras | 1 (b 0 , lb 1 , nb 0, w 0, pen 0) |
Total | 72/4 (32 Overs, RR: 2.25) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Hasan Mahmud | 3 | 0 | 19 | 0 | 6.33 | |
Taijul Islam | 16 | 3 | 23 | 3 | 1.44 | |
Nayeem Hasan | 13 | 1 | 29 | 1 | 2.23 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<