தொடர்ந்தும் 11வது தடவையாக ஆரம்பமாகவுள்ள மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்

308

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், சிலோன் பிஸ்கட் லிமிடட் நிறுவனத்தின் பிரசித்திபெற்ற வர்த்தகப் பெயரான மஞ்சியின் அனுசரணையுடன், தொடர்ந்தும் 11ஆவது தடவையாக தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.

நிரல்படுத்தல் போட்டியில் இலங்கை அணிக்கு மீண்டுமொரு வெற்றி

ஆசிய விளையாட்டு விழாவில் 13 தொடக்கம்16 இடங்களுக்கான நிரல்படுத்தல் அரையிறுதிப் போட்டியில் நேபாள அணியை எதிர்கொண்ட…

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டித் தொடர், டிசம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வருகின்றது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறந்த கரப்பந்தாட்ட வீரர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான  www.muncheevolleyball.com என்ற புதிய இணையத்தளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளுக்குமான இந்த போட்டித் தொடர் நொவீஸ் மற்றும் சுப்பர் லீக் போட்டிகளாக நடத்தப்படவுள்ளன. அத்துடன் போட்டிகள் தேசிய மற்றும் மாவட்டம் என இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இறுதிப் போட்டி டிசம்பர் 16ஆம் திகதி மஹரகம தேசிய இளைஞர் மன்ற உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள கரப்பந்தாட்ட வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், கம்பஹா, புத்தளம், மாதம்பே ருவன்வெல்ல மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளிலும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் இம்முறை நடைபெறவுள்ள மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் 2500 – 3000 வரையிலான அணிகள் பங்கேற்கலாம் என ஏற்பாட்டுக்குழு எதிர்பார்க்கிறது.

Photos: 11th Munchee National Volleyball Championship 2018 | Press Conference

ThePapare.com | Viraj Kothalawala | .04/09/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be considered an…

ஆரம்பமாகவுள்ள மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் குறித்த தெளிவை வழங்க ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, கருத்து வெளியிட்ட சக்திவலு மற்றும் மீள் உருவாக்கல் சக்திகள் அமைச்சரும், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான ரஞ்சித் சியம்பலாபிடிய,

“இலங்கையின் தேசிய விளையாட்டை வலுப்படுத்துவதற்கு, மஞ்சி நிறுவனம் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றது. அதிலும் தொடர்ந்து 11ஆவது முறையாக இந்த போட்டித் தொடருக்கு அனுசரணையளித்து வருகிறது. தனியார் நிறுவனங்களில் மிக உயர்நிலையில் உள்ள சிலோன் பிஸ்கட் லிமிடட் நிறுவனம், இலங்கையின் புதிய திறமைகளை நாடுபூராகவும் தேடுவதற்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது” என குறிப்பிட்டார்.

அத்துடன், சிலோன் பிஸ்கட் லிமிடட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி நளின் கருணாரத்ன கூறுகையில்,

“இலங்கையில் ஒவ்வொரு வீடுகளிலும் விரும்பக்கூடிய ஒன்றாக மஞ்சி இருக்கிறது. அதேபோன்று மக்களுக்கு அதிகம் பிடித்த விளையாட்டான கரப்பந்தாட்டத்துக்கு அனுசரணை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் தொடர்ந்தும் 11ஆவது முறையாக இந்த போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்குகிறோம். அதனையிட்டு நாம் பெருமைகொள்கிறோம்.

நாம் புதிய விற்பனைகளை சந்தைப்படுத்துவதற்கு தவறுவதில்லை. அதேபோல் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சிறந்த வீரர்களை கண்டறிய நாம் உதவுகிறோம். அவர்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கும், ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகpழ்ச்சிப்படுத்துவதற்கும் இந்த தொடரானது சிறப்பாக அமையும்” என குறிப்பிட்டார்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<