மூவகை தொடரிலும் விளையாட பாகிஸ்தான் செல்லும் பங்களாதேஷ் அணி

66
Bangladesh vs Pakistan T20 2020
ESPNcricinfo

மிக நீண்டகால காத்திருப்பின் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தான் செல்லவுள்ள பங்களாதேஷ் அணி அங்கு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கவுள்ளது. 

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது தடைப்பட்டன. ஏனைய அணிகள் பாதுகாப்பு அச்சம் காரணமாக கடந்த  10 வருடங்களாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்ந்து கொண்டன.

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாதம் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை குழாம் இன்றைய தினம்

இந்நிலையில், கடந்த வருடம் இலங்கை அணி சில அனுபவ வீரர்களை இழந்து பாகிஸ்தான் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களிலும் விளையாடியது. அதனை தொடர்ந்து இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. 

இவ்வாறு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக விளையாடியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் விடுக்கப்பட்ட அழைப்பினை தொடர்ந்து இழுபறி நிலை தொடர்ந்துவந்த நிலையில் தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.  

ஆரம்பத்தில், டெஸ்ட் கிரிக்கெட் இல்லை, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் மாத்திரம் தான் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் விளையாடும் என்ற பல செய்திகள் வெளியாகிவந்த நிலையில் தற்போது மூவகையாக தொடர்களிலும் பங்களாதேஷ் விளையாடும் என்ற உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

BPL வரலாற்றில் சாதனை நிகழ்த்திய மொஹமட் ஆமிர்

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் (BPL) தொடரின் நேற்றைய (13) ஆட்டத்தில் குல்னா டைகர்ஸ் அணி வீரர் மொஹமட் ஆமிர் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்

அதன்படி 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஒற்றை ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய மூன்று தொடர்கள் நடைபெறவுள்ளன. அத்துடன் குறித்த மூன்று தொடர்களுக்குமான போட்டி அட்டவணையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தற்போது வெளியிட்டுள்ளது. 

குறித்த போட்டி அட்டவணையின்படி ஆரம்பத்தில் டி20 சர்வதேச தொடர் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டியின் பின்னர் அடுத்த மாதம் (பெப்ரவரி) 20ஆம் திகதி பாகிஸ்தான் சுப்பர் லீக் நடைபெறவுள்ள காரணத்தினால், ஒரு டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் திகதி ஒற்றை ஒருநாள் சர்வதேச போட்டி நடைபெறவுள்ளது. அதன் பின்னரே எஞ்சிய இரண்டாவது டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணை.

24 ஜனவரி முதலாவது டி20 சர்வதேச போட்டி லாஹூர் 

25 ஜனவரி இரண்டாவது டி20 சர்வதேச போட்டி லாஹூர் 

27 ஜனவரி மூன்றாவது டி20 சர்வதேச போட்டி லாஹூர் 

7 11 பெப்ரவரி முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி

3 ஏப்ரல் – ஒற்றை ஒருநாள் சர்வதேச போட்டி கராச்சி

5 9 ஏப்ரல் – இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க