அஷ்ரப் தலைமையிலான 4×100 அஞ்சலோட்ட அணிக்கு இரண்டாமிடம்

48
 

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக கடந்த 2017ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்தினை வென்ற கிழக்கு மாகாண 4×100 அஞ்சலோட்ட அணி, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கத்தினை வென்று ஆறுதல் அடைந்தது.

இறுதியாக, கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவிலும் கிழக்கு மாகாண அணி வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வரலாற்று வெற்றியுடன் தங்கத்தை தமதாக்கிய வட மாகாண உதைபந்து அணி

45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் பதுளை வின்சென்ட் …

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 45ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து 2ஆவது நாளாகவும் வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டப் போட்டிகள் நேற்று (26) இரவு மின்னொளியின் கீழ் நடைபெற்றன

இதன்படி, விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான 4x100 அஞ்சலோட்டப் போட்டியில் சப்ரகமுவ மாகாண அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. குறித்த போட்டியை நிறைவுசெய்ய அந்த அணி 41.77 செக்கன்களை எடுத்துக்கொண்டது.  

கடந்த வருடம் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சப்ரகமுவ மாகாண அணி, தேசிய விளையாட்டு விழாவில் சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், தென் மாகாணத்துக்கு பலத்த போட்டியைக் கொடுத்த மொஹமட் ஷ்ரப் தலைமையிலான கிழக்கு மாகாண அணி, சற்று தாமதத்துடன் போட்டியை ஆரம்பித்த காரணத்தால் 42.55 செக்கன்களில் ஓடிமுடித்து 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்டார் புவிதரன்

பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 45 ஆவது தேசிய …

குறித்த போட்டியை கல்முனையைச் சேர்ந்த மொஹமட் இன்சாப் ஆரம்பித்து வைத்ததுடன், 2ஆவது கோல் பரிமாற்றத்தை பொத்துவிலைச் சேர்ந்த .எல்.எம் ஷ்ரப்பும், 3ஆவது கோல் பரிமாற்றத்தை ஒலுவிலைச் சேர்ந்த ரஜாஸ் கானும் மேற்கொள்ள, இறுதி 100 மீற்றரை அக்கரைப்பற்றைச் சேர்ந்த சபீர் அலி ஓடியிருந்தார்.

அத்துடன், 43.17 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த மேல் மாகாண அணி 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, தவறான கோல் பரிமாற்றத்தை மேற்கொண்ட வட மாகாண அணி போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது.

குறித்த போட்டியில் பங்குகொண்ட வட மாகாண அஞ்சலோட்ட அணியில் பிரேம் தாஸ், விதுஷன், சதீஷன் மற்றும் நிரோஷன் ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் மேல் மாகாண அணி தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, தென் மாகாண அணி வெள்ளிப் பதக்கத்தையும், மத்திய மாகாண அணி வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டன.

மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…