இலங்கையை வந்தடைந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

124

இம்மாத இறுதியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் இன்று (12) மாலை இலங்கை மண்ணினை வந்தடைதிருக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட IPL வீரர்கள்

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக பங்களாதேஷ் – இலங்கை அணிகள் பங்குபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 21ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

இந்நிலையில், மொமினுல் ஹக் தலைமையிலான 21 பேர் அடங்கிய பங்களாதேஷ் குழாம் இன்று இலங்கை மண்ணினை வந்தடைதிருப்பதோடு, அவ்வணி இலங்கையில் கொவிட்-19 வைரஸிற்கான கட்டாய சுயதனிமைப்படுத்தல் காலத்தினை பூர்த்தி செய்த பின்னர் தமது பயிற்சிகளை இலங்கை மண்ணில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெஸ்ட் தொடர் அட்டவணை

பயிற்சிப் போட்டி – ஏப்ரல் 17-19ஆம் திகதி வரை

முதல் டெஸ்ட் – ஏப்ரல் 21 – 25ஆம் திகதி வரை – பல்லேகல

இரண்டாவது டெஸ்ட் – ஏப்ரல் 29 – மே 03ஆம் திகதி வரை – பல்லேகல

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<