பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் எப்போது?

219

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறலாம் என கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதன்படி, .சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான பங்களாதேஷ் அணி இலங்கை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது

ஐசிசி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, கடந்த வருடம் ஜுலை மாதம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை வரவிருந்தது

எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் குறித்த தொடரை கடந்த வருடம்க்டோபர் மாதம் நடத்துவதற்கு இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் நடவடிக்கை எடுத்திருந்தன.

ஆனால், இலங்கை அரசாங்கத்தின் கொவிட் – 19 வைரஸ் விதிமுறைகள் காரணமாக குறித்த தொடரில் பங்கேற்க முடியாது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்தது.

எவ்வாறாயினும், குறித்த டெஸ்ட் தொடர் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ள போதும், திகதிகள் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஸாமுத்தீன் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில்,

”இந்த டெஸ்ட் தொடரானது இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டன. இரண்டு அணிகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு சர்வதேச போட்டித் தொடர்களிலும் விளையாடாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

பங்களாதேஷில் T20I தொடரில் விளையாடவுள்ள ஆஸி., நியூசிலாந்து

எனவே, தொடர்ந்து இந்தத் தொடரை ஒத்திவைப்பது நல்ல விடயமல்ல. இதனால் ஏப்ரல் மாத்தில் இரண்டு அல்லது மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான பேச்சுவார்த்தைகளை இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் முன்னெடுத்து வருகின்றன” என அவர் தெரிவித்தார்

இதுஇவ்வாறிருக்க, உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக, இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மே மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை கடந்த வாரம் உறுதி செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<