இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் நசும் அஹ்மட்!

India tour of Bangladesh 2022

171
Nasum Ahmed

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் நசும் அஹ்மட் இணைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ளது.

>> இந்திய தொடரிலிருந்து வெளியேறும் கேன் வில்லியம்சன்!

இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 188 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் போது உம்ரான் மலிக் வீசிய பந்து சகீப் அல் ஹஸனின் தோற்பட்டை பகுதியில் தாக்கியிருந்தது. குறித்த உபாதை காரணமாக அவரால் 12 ஓவர்களை மாத்திரமே இரண்டாவது இன்னிங்ஸில் வீச முடிந்திருந்தது. எனவே, சகீப் அல் ஹசனின் பந்துவீச்சு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் நசும் அஹ்மட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

நசும் அஹ்மட் பங்களாதேஷ் அணிக்காக 32 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரையில் பங்களாதேஷ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே, இரண்டாவது போட்டியில் இவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுமாத்திரமின்றி வேகப்பந்துவீச்சாளரான எப்டொட் ஹொஸைன் உபாதை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. இவரும் குழாத்திலிருந்து நீக்கப்ட்டுள்ளதுடன், மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் முன்னாள் தலைவர் மொமினுல் ஹக் முதல் போட்டியில் விளையாடாத போதும் குழாத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளார். எனவே, இவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாம்

மஹ்மதுல் ஹஸன் ஜோய், நஜ்முல் ஹொஸைன் செண்டோ, மொமினுல் ஹக், யசீர் அலி, முஷ்பிகூர் ரஹீம், சகீப் அல் ஹசன் (தலைவர்), லிடன் டாஸ், நூருல் ஹசன், மெஹிதி ஹாசன் மிராஷ், தைஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹ்மட், கஹ்லீட் அஹ்மட், ஷகீர் ஹசன், ரெஜாவுர் ரஹ்மான் ராஜா

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<