சுபர் ஜயண்ட்ஸ் அணியில் விளையாடவுள்ள அகில தனன்ஜய

SA T20 League 2023

924

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள SA T20 லீக் தொடரில் பங்கேற்கும் டர்பன் சுபர் ஜயண்ட்ஸ் அணியில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜய இணைக்கப்பட்டுள்ளார்.

SA T20 லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஏற்கனவே நடைபெற்று முடிந்திருந்தாலும் தங்களுடைய குழாம்களில் உள்ள இடங்களை பூர்த்திசெய்வதற்கு தொடர்ந்தும் வீரர்கள் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

PSL T20 தொடர் ஏலத்தில் இரு இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு

இந்தநிலையில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜயவை தங்களுடைய அணியில் இணைத்துள்ளதாக டர்பன் சுபர் ஜயண்ட்ஸ் அணி அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக இருந்த இவர், அவருடைய பந்துவீச்சு தடைக்கு பின்னர் சிறப்பாக பந்துவீச தவறியிருந்தார். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் சராசரியான பிரகாசிப்புகளை வழங்கியிருந்தார். பின்னர், வனிந்து ஹஸரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷனவின் வருகையின் காரணமாக இவருடைய இடம் அணியில் கேள்விக்குறியாகியிருந்தது.

Abu Dhabi T10 தொடரில் கலக்கிய இலங்கை வீரர்கள்!

எனினும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடும் வாய்ப்பை அகில தனன்ஜய பயன்படுத்திவரும் நிலையில், இறுதியாக கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலும் விளையாடியிருந்தார். இந்தநிலையில் தற்போது இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க விளையாடவுள்ள டர்பன் சுபர் ஜயண்ட்ஸ் அணியில் அகில தனன்ஜய இணைக்கப்பட்டுள்ளார்.

அகில தனன்ஜய மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோருடன், பிரிட்டோரியர்ஸ் கெப்பிடல்ஸ் அணிக்காக குசல் மெண்டிஸ் SA T20 லீக்கில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<