சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் உபாதைக்குள்ளான அணித்தலைவர் ருத்துராஜ் காய்க்வாட்டின் பிரதியீட்டு வீரர் யார் தொடர்பில் அந்த அணியின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
>>முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை A கிரிக்கெட் அணி சிறந்த ஆரம்பம்<<
ருத்துராஜ் காய்க்வாட் இந்தப்பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் இருந்து முழங்கை உபாதை காரணமாக முழுமையாக விலகினார். காய்க்வாட்டின் உபாதையினால் சென்னை சுப்பர் கிங்ஸ் இந்தப் பருவத்திற்கான எஞ்சிய IPL போட்டிகளில் மஹேந்திர சிங் டோனியினை தலைவராக நியமனம் செய்தது.
எனினும் ருத்துராஜ் காய்க்வாட்டின் பிரதியீட்டு வீரர் யார் என்பது தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது மும்பையினைச் சேர்ந்த 17 வயது இளம் ஆரம்ப வீரர் ஆயுஷ் மந்த்ராவினை ருத்துராஜ் காய்க்வாட்டினை அவரது பிரதியீட்டு வீரராக உள்வாங்கியிருக்கின்றது.
ருத்துராஜ் காய்க்வாட்டின் பிரதியீட்டு வீரராக மாறியிருக்கும் ஆயுஷ் மந்த்ரா இந்தப் பருவத்திற்கான IPL தொடரிற்கான மெகா வீரர்கள் ஏலத்தில் 30 இலட்ச ரூபாய்களுக்கு விலை கோரப்பட்டிருந்தார். எனினும் அவரினை எந்த அணிகளும் கொள்வனவு செய்திருக்கவில்லை.
ஆயுஷ் மந்த்ரா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டிருப்பதோடு இதுவரை 09 முதல்தரப் போட்டிகளில் ஆடி 504 ஓட்டங்களையும், List A போட்டிகளில் 458 ஓட்டங்களையும் பெற்றிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<