ஹங்கேரி அணிக்கு வெற்றி

235
Austria 0-2 Hungary
Attila Kisbenede AFPGetty Images

நேற்று நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ண கால்பந்து போட்டியில் ஹங்கேரி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.

15ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.  நேற்று இரவு நடந்த ஆட்டத்தில்எப்” பிரிவில் உள்ள ஹங்கேரிஆஸ்திரியா அணிகள் மோதின.

இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்புக் காட்டினார்கள். ஹங்கேரி அணி வசம் பந்து அதிக நேரம் இருந்தது. முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் போடப்படவில்லை. 2ஆவது பாதி ஆட்டத்தில் ஹங்கேரி அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

62ஆவது நிமிடத்தில் ஸ்சாலய் கோல் அடித்தார். சகவீரர் லென்ஹஸ்லர் கடத்தி கொடுத்த பந்தை லாவகமாக வாங்கி கோல் அடித்தார்.

66ஆவது நிமிடத்தில் ஆஸ்திரியா வீரர் டிரகோவிக் 2ஆவது மஞ்சள் அட்டை பெற்றதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்டது. இது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.

87ஆவது நிமிடத்தில் ஹங்கேரி 2ஆவது கோலைப் போட்டது. மாற்று வீரராக களம் இறங்கிய ஸ்டைபெர் அந்த கோலை அடித்தார். ஆட்டம் முடிவில் ஹங்கேரி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் போர்த்துக்கல்ஐஸ்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரபல வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ தலைவராக உள்ள போர்த்துக்கல் அணி தொடக்கம் முதலே வேகத்தைக் காட்டியது.

31ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் நானி கோல் அடித்தார். இதனால் உற்சாகம் அடைந்த போர்த்துக்கல் அணி 2ஆவது கோலை அடிக்க முயற்சித்தது. ஆனால் அதை ஐஸ்லாந்து வீரர்கள் சாதுரியமாகத் தடுத்தனர்.

முதல் பாதியில் போர்த்துக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2ஆவது பாதியில் பதில் கோல் அடித்து போர்த்துக்கல்லுக்கு  ஐஸ்லாந்து அதிர்ச்சி அளித்தது. 50ஆவது நிமிடத்தில் ஐஸ்லாந்து வீரர் பிஜார் நெசன் கோல் அடித்தார்.

90 நிமிடம் முடியும் வரை இரு அணிகளாலும் 2ஆவது கோல் அடிக்க முடியவில்லை. வீணான நேரத்தை ஈடுகட்ட கொடுக்கப்பட்ட கூடுதல் 5 நிமிடத்தில் போர்த்துக்கல் அணிக்கு பிரீகிக் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அதை ரொனால்டோ தவறவிட்டு ஏமாற்றம் அளித்தார். முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்தது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்