மைலோ நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் 13ஆவது ஜனாதிபதிக் கிண்ண ரக்பி நொக் அவுட் சுற்றுப் போட்டிகள் 7 அணிகளின் பங்குபற்றுதலோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (9) சுகததாச விளையாட்டு அரங்கத்தில் ஆரம்பமாகவுள்ளது.
1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஜனாதிபதிக் கிண்ணத்துக்கான நொக் அவுட் போட்டிகளானது, பாடசாலைகள் ரக்பி லீக் போட்டிகள் மட்டத்தில் முதலிடம் பெறும் எட்டு அணிகளின் பங்குபற்றுதலோடு, சிறந்த அணியை தெரிவு செய்யும் இறுதிக் கட்ட போட்டித் தொடராக காணப்படுகின்றது.
போட்டியின் அறிமுக நிகழ்வின் புகைப்படங்கள்
அந்த வகையில் இந்த வருடத்துக்கான போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (9), காலிறுதிப் போட்டிகளுடன் ஆரம்பமாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. அத்துடன் இறுதிப் போட்டியை எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வருடங்களாக வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற ரக்பி போட்டிகளை மீண்டும் சுகததாச அரங்கில் காலிறுதிப் போட்டிகள் மற்றும் அரையிறுதிப் போட்டிகளை நடாத்துவதற்கு இலங்கை பாடசாலைகள் ரக்பி சங்கம் தெரிவு செய்துள்ளது.
ஜனாதிபதிக் கிண்ண போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில், நடைபெற்ற ஊடகவிலாளர்கள் சந்திப்பில் பேசிய கெளரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மக்களை ஐக்கியப்படுத்தும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்
இன்று நாம் கல்வி சாராத செயற்பாடுகள் (Extra-curricular) மற்றும் விளையாட்டினை கல்வி பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கியிருப்பதால் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு வகுப்பறையில் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களையும் தாண்டி வேறு பல பயனுள்ள விடயங்களையும் தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
”விளையாட்டு என்பது இனம், மதம் மற்றும் சாதி என்ற பாகுபாடற்று மக்களை ஐக்கியப்படுத்தும் ஒரு ஊடகமாக உள்ளது. இதைத்தான் நாம் இப்போது எமது நாட்டிலிருந்து எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் ஜனாதிபதி கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி, வெகு விமர்சையாக கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கிண்ணத்துக்கான போட்டியிலிருந்து விலகியியுள்ள சிங்கர் லீக் போட்டி வெற்றியாளர்களான ரோயல் கல்லூரி உள்ளடங்களாக 7 பாடசாலை ரக்பி அணிகள் பரிசில்களைப் பெறவுள்ளன. இசிபதன கல்லூரி, திரித்துவக் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, புனித பேதுரு கல்லூரி, புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் தர்மராஜ கல்லூரி ஆகியவையே பங்குபற்றவுள்ள அணிகளாகும்.
கொழும்பு ரோயல் கல்லூரி போட்டியிலிருந்து விலகியுள்ளதால், காலிறுதிப் போட்டியில் ரோயல் கல்லூரியுடன் மோதவிருந்த தர்மராஜ கல்லூரி, எவ்விதப் போட்டியுமின்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
படுகாயமடைந்த சயன்ஸ் கல்லூரி வீரருக்கு புனித அந்தோனியார் கல்லூரியினால் நன்கொடை
அதேநேரம் போட்டிக்கு அனுசரணை வழங்கும் இலங்கை மைலோ நிறுவனம், ஜனாதிபதி கிண்ணத்துக்கான போட்டிகளை வலுப்படுத்தும் பங்குதாரராக தொடர்ச்சியாக 25 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
”கடந்த 25 வருடங்ககளாக ரக்பி போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வருகின்றோம் அதாவது கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலங்கள். நாங்கள் அனுசரணை வழங்க ஆரம்பித்த பொழுது 20 பாடசாலைகள் மட்டுமே போட்டிகளில் பங்குபற்றியிருந்தன.”
”இந்த 20 பாடசாலைகளினதும் விளையாட்டை மேம்படுத்தும் சவால் எங்களுக்கு இருந்தது. ஊடகத்துறை, மற்றும் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இதுவரை சிறந்த பல வீரர்களை உருவாக்கியுள்ளோம்.”
போட்டி அட்டவணை
திகதி
|
போட்டி | அணி 1 | அணி 2 | இடம்
|
ஜூன் 9 | காலிறுதி 4 | வெஸ்லி கல்லூரி | புனித ஜோசப்
கல்லூரி |
சுகததாச |
ஜூன் 11 | காலிறுதி 2 | இசிபதன கல்லூரி | புனித அந்தோனியார் கல்லூரி | சுகததாச |
ஜூன் 10 | காலிறுதி 3 | திரித்துவக் கல்லூரி | புனித பேதுரு கல்லூரி | சுகததாச |
ஜூன் 17 | அரையிறுதிப் போட்டி 1 | தர்மராஜ கல்லூரி | காலிறுதி வெற்றியாளர் 4 | சுகததாச |
ஜூன் 18 | அரையிறுதிப் போட்டி 2 | காலிறுதி வெற்றியாளர் 2 | காலிறுதி வெற்றியாளர் 3 | சுகததாச |
ஜூன் 24 | இறுதிப் போட்டி | அரையிறுதி வெற்றியாளர் 1 | அரையிறுதி வெற்றியாளர் 2 | ரேஸ் கோர்ஸ் |