அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் மற்றும் பிரபாத் ஜயசூரியவின் அற்புத பிரகாசிப்புகளின் உதவியுடன் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், அவுஸ்திரேலிய அணியை வெறும் 151 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி தொடரையும் 1-1 என சமப்படுத்தியுள்ளது.
>> சந்திமாலின் சதத்துடன் ஆஸி.க்கு சவால் கொடுக்கும் இலங்கை!
இலங்கை அணி மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் 431 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தநிலையில் களமிறங்கியது. தினேஷ் சந்திமால் 118 ஓட்டங்களுடனும், ரமேஷ் மெண்டிஸ் 7 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
இவர்கள் இருவரும் வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பிக்க இலங்கை அணியின் ஒட்ட எண்ணிக்கை 450 ஓட்டங்களை கடந்தது. இதில் துரதிஷ்டவசமாக மிச்சல் ஸ்டாக்கின் பந்துவீச்சில் 29 ஓட்டங்களை பெற்றிருந்த ரமேஷ் மெண்டிஸ் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய மஹீஷ் தீக்ஷன பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தினேஷ் சந்திமால் தன்னுடைய 150 ஓட்டங்களை கடந்தார். அதேநேரம் இலங்கை அணியானது மதியபோசன இடைவேளையின் போது, 499 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
மதியபோசன இடைவேளைக்கு பின்னர் ஆரம்பித்த இந்தப்போட்டியில் 9வது விக்கெட்டுக்காக களமிறங்கிய பிரபாத் ஜயசூரிய ஓட்டங்களின்றி ஆட்டமிழக்க, 505 ஓட்டங்களுக்கு இலங்கை அணி தங்களுடைய 9வது விக்கெட்டையும் இழந்தது. எனினும் கசுன் ராஜிதவின் பங்களிப்புடன் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் தன்னுடைய கன்னி டெஸ்ட் இரட்டைச்சதத்தை பதிவுசெய்தார்.
இரட்டைச்சதத்தை பதிவுசெய்தது மாத்திரமின்றி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை (206 ஓட்டங்கள்) பதிவுசெய்ததுடன், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் இலங்கை அணி அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக 554 ஓட்டங்களையும் பதிவுசெய்தது.
>> கன்னி இரட்டைச்சதம் விளாசி சாதித்த தினேஷ் சந்திமால்!
இலங்கை அணியின் சார்பாக சந்திமால் அதிகபட்சமாக 206 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்கள், குசல் மெண்டிஸ் 85 ஓட்டங்கள், கமிந்து மெண்டிஸ் 61 ஓட்டங்கள் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் 53 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுத்தனர்.
இதன்மூலம் இலங்கை அணியானது 554 ஓட்டங்களை பெற்றதுடன், 190 ஓட்டங்களால் முன்னிலையையும் பெற்றுக்கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், மிச்சல் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்பத்தில் உஸ்மான் கவாஜாவின் ஸ்டம்பிங் வாய்ப்பை நிரோஷன் டிக்வெல்ல தவறவிட, ஆரம்ப இணைப்பாட்டம் தொடர்ந்தது. எனினும், தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் டேவிட் வோர்னர் (24) ஆட்டமிழந்தார். எனவே, தேநீர் இடைவேளையின் போது அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தேநீர் இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறியது. பிரபாத் ஜயசூரியவின் ஒரே ஓவரில் உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வீசப்பட்ட ரமேஷ் மெண்டிஸின் ஓவரில் டிராவிஷ் ஹெட் போவ்ல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
இவ்வாறு தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசேங் மற்றும் கிரிஸ் கிரீன் ஆகியோர் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்ப தொடங்கினர். இவர்கள் இருவரும் 38 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றநிலையில், பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் மார்னஸ் லபுசேங் (32) ஆட்டமிழந்தார்.
மார்னஸ் லபுசேங்கின் ஆட்டமிழப்பை தொடர்ந்து கிரிஸ் கிரீன் (23) மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோரின் விக்கெட்டுகளை பிரபாத் ஜயசூரிய ஒரே ஓவரில் கைப்பற்றியதுடன், அறிமுக டெஸ்ட் போட்டியில் இலங்கை சார்பில் மிகச்சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்த இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். இதற்கு முதல் பிரவீன் ஜயவிக்ரம கடந்த ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 178 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதனைத்தொடர்ந்தும் அவுஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தி இலங்கை சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற, 41 ஓவர்களில் 151 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபத் ஜயசூரிய 6 விக்கெட்டுகளை வீழ்த்த, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த டெஸ்ட் போட்டியை பொருத்தவரை நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 554 ஓட்டங்களை குவித்திருந்தது.
இதேவேளை ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 54.17 என்ற வெற்றி சராசரியுடன் 3வது இடத்தை தக்கவைத்துள்ளதுடன், அவுஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் தோல்வியை சந்தித்து 70.00 என்ற வெற்றி சராசரியுடன் 2வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் முதலிடத்தை தென்னாபிரிக்க அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Usman Khawaja | b Ramesh Mendis | 37 | 77 | 4 | 0 | 48.05 |
David Warner | b Kasun Rajitha | 5 | 13 | 1 | 0 | 38.46 |
Marnus Labuschagne | st Niroshan Dickwella b Prabath Jayasuriya | 104 | 156 | 12 | 0 | 66.67 |
Steve Smith | not out | 145 | 227 | 16 | 0 | 63.88 |
Travis Head | b Prabath Jayasuriya | 12 | 36 | 0 | 0 | 33.33 |
Cameron Green | lbw b Prabath Jayasuriya | 4 | 14 | 0 | 0 | 28.57 |
Alex Carey | c Ramesh Mendis b Prabath Jayasuriya | 28 | 61 | 4 | 0 | 45.90 |
Mitchell Starc | c Kusal Mendis b Prabath Jayasuriya | 1 | 8 | 0 | 0 | 12.50 |
Pat Cummins | lbw b Kasun Rajitha | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Nathan Lyon | lbw b Prabath Jayasuriya | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Mitchell Swepson | lbw b Maheesh Theekshana | 3 | 14 | 0 | 0 | 21.43 |
Extras | 15 (b 5 , lb 6 , nb 3, w 1, pen 0) |
Total | 364/10 (110 Overs, RR: 3.31) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 25 | 4 | 70 | 2 | 2.80 | |
Ramesh Mendis | 33 | 1 | 117 | 1 | 3.55 | |
Maheesh Theekshana | 16 | 2 | 48 | 1 | 3.00 | |
Prabath Jayasuriya | 36 | 3 | 118 | 6 | 3.28 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Mitchell Starc b Cameron Green | 6 | 25 | 0 | 0 | 24.00 |
Dimuth Karunaratne | lbw b Mitchell Swepson | 86 | 165 | 10 | 0 | 52.12 |
Kusal Mendis | lbw b Nathan Lyon | 85 | 161 | 9 | 0 | 52.80 |
Angelo Mathews | c Marnus Labuschagne b Mitchell Starc | 52 | 117 | 4 | 0 | 44.44 |
Dinesh Chandimal | not out | 206 | 326 | 16 | 5 | 63.19 |
Kamindu Mendis | b Mitchell Swepson | 61 | 137 | 7 | 0 | 44.53 |
Niroshan Dickwella | c Pat Cummins b Nathan Lyon | 5 | 13 | 0 | 0 | 38.46 |
Ramesh Mendis | lbw b Mitchell Starc | 29 | 98 | 0 | 0 | 29.59 |
Maheesh Theekshana | b Pat Cummins | 10 | 27 | 2 | 0 | 37.04 |
Prabath Jayasuriya | b Mitchell Starc | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Kasun Rajitha | lbw b Mitchell Swepson | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Extras | 14 (b 4 , lb 6 , nb 1, w 3, pen 0) |
Total | 554/10 (180 Overs, RR: 3.08) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mitchell Starc | 29 | 3 | 89 | 4 | 3.07 | |
Pat Cummins | 30 | 5 | 95 | 1 | 3.17 | |
Nathan Lyon | 64 | 5 | 194 | 2 | 3.03 | |
Cameron Green | 6 | 0 | 20 | 0 | 3.33 | |
Mitchell Swepson | 37 | 2 | 100 | 3 | 2.70 | |
Travis Head | 8 | 0 | 27 | 0 | 3.38 | |
Marnus Labuschagne | 6 | 0 | 16 | 0 | 2.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
David Warner | lbw b Ramesh Mendis | 24 | 44 | 4 | 0 | 54.55 |
Usman Khawaja | c Oshada Fernando b Prabath Jayasuriya | 29 | 47 | 4 | 0 | 61.70 |
Marnus Labuschagne | lbw b Prabath Jayasuriya | 32 | 59 | 3 | 0 | 54.24 |
Steve Smith | lbw b Prabath Jayasuriya | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Travis Head | b Ramesh Mendis | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Cameron Green | st Niroshan Dickwella b Prabath Jayasuriya | 23 | 32 | 2 | 0 | 71.88 |
Alex Carey | not out | 16 | 28 | 0 | 0 | 57.14 |
Mitchell Starc | c Prabath Jayasuriya b Kusal Mendis | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Pat Cummins | lbw b Maheesh Theekshana | 16 | 18 | 1 | 0 | 88.89 |
Nathan Lyon | lbw b Maheesh Theekshana | 5 | 3 | 1 | 0 | 166.67 |
Mitchell Swepson | b Prabath Jayasuriya | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Extras | 1 (b 1 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 151/10 (41 Overs, RR: 3.68) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 5 | 1 | 16 | 0 | 3.20 | |
Maheesh Theekshana | 5 | 0 | 28 | 2 | 5.60 | |
Ramesh Mendis | 15 | 2 | 47 | 2 | 3.13 | |
Prabath Jayasuriya | 16 | 2 | 59 | 6 | 3.69 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<