ஒரு நாள் தரவரிசையில் அவுஸ்திரேலியாவுக்கு வரலாற்று பின்னடைவு

339

ஐ.சி.சி இன் ஒரு நாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் நடப்பு உலகச் சம்பியனான அவுஸ்திரேலியா அணி எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது.

கிரிக்கெட் என்றாலே ஞாபகத்திற்கு வருவது அவுஸ்திரேலியாதான். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த அந்த அணி, அண்மைக்காலமாக தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றது.

மழையினால் நழுவிப்போன இலங்கையின் வெற்றி வாய்ப்பு

சென். லூசியா நகரில் நடைபெற்று வந்த சுற்றுலா..

உலக சம்பியனாக கடந்த இரண்டு வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்ற அவுஸ்திரேலிய அணி, இறுதியாக தென்னாபிரிக்காவுடன் நடைபெற்ற ஒரு நாள் தொடரை இழந்தது.

அதிலும் குறிப்பாக, தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக அவுஸ்திரேலிய வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த அணியின் முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், உதவித் தலைவர் டேவிட் வோர்னர் மற்றும் பந்தை சேதப்படுத்திய இளம் வீரர் பென் கிராப்ட் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்களுக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாட போட்டித் தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் அவுஸ்திரேலியக் கிரிக்கெட் சபையை மட்டுமல்லாது, அந்நாட்டு ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்த விவகாரத்துக்குப் பின்னர் வெற்றிப்பாதைக்குத் திரும்ப முடியாமல் விக்கெட் காப்பு வீரரான டிம் பெய்ன் தலைமையிலான இளம் அவுஸ்திரேலிய அணி அவதிப்பட்டு வருகிறது.

அந்த அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய அவுஸ்திரேலிய அணி, ஒரு நாள் போட்டிக்கான ஐ.சி.சி தரவரிசையில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளது. முன்னதாக 1984 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

அத்துடன், இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி அவுஸ்திரேலியா தொடரை இழந்தால், தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும் அந்த அணிக்கு ஒரு நாள் தொடரொன்றை இழக்க நேரிடும்.

சங்கா, மஹேல உள்ளிட்ட வீரர்களின் நிராகரிப்பு வரவேற்கத்தக்கது – அர்ஜுன ரணதுங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான..

எனினும், 5 தடவைகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி இறுதியாக நடைபெற்ற 15 ஒரு நாள் போட்டிகளில் 13 இல் தோல்வியை சந்தித்துள்ளது.

சமீபத்திய ஐ.சி.சி இன் தரவரிசையில் அந்த அணி பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானும், அவுஸ்திரேலிய அணியும் தலா 102 புள்ளிகள் பெற்றிருந்தாலும், தசம புள்ளிகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்படி, புதிய ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்து அணி (124 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய அணி (122 புள்ளிகள்) இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் தென்னாபிரிக்கா (113 புள்ளிகள்) மற்றும் நியூசிலாந்து (112 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே 3 ஆம் மற்றும் 4 ஆம் இடங்களைப் பிடித்துள்ளன. அத்துடன், பங்களாதேஷ், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் முறையே 7 ஆவது, 8 ஆவது மற்றும் 9 ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<