Home Tamil வெள்ளிப்பதக்கத்தை வென்றது இலங்கை மகளிர் அணி

வெள்ளிப்பதக்கத்தை வென்றது இலங்கை மகளிர் அணி

Asian Games 2023

111
Asian Games 2023

சீனாவின் ஹோங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு விழாவின் மகளிருக்கான T20 கிரிக்கெட்டில் இரண்டாமிடத்தை பிடித்த இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. 

இந்திய மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி தங்கப்பதக்கத்தை தவறவிட்டது. 

>> ஆசிய விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. இந்திய அணிக்கு துடுப்பாட்டத்தில் ஸ்ம்ரித்தி மந்தனா சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தாலும், இலங்கை அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது. 

குறிப்பாக ஓட்டவேகத்தை கட்டுப்படுத்திய இலங்கை மகளிர் அணி மந்தனா 46 ஓட்டங்களையும், ஜெமீமா ரொட்ரிகஸ் 42 ஓட்டங்களையும் பெற்ற போதும், 116/7 ஓட்டங்களுக்கு இந்திய அணியை கட்டுப்படுத்தியது. பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக உதேசிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி ஆரம்ப முதல் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. சமரி அதபத்து, அனுஷ்கா சஞ்சீவனி மற்றும் விஷ்மி குணரத்ன ஆகிய முன்னணி துடுப்பாட்ட வீராங்கனைகள் 15 ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

எனினும் மத்தியவரிசையில் ஹாஷினி பெரேரா 25 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 23 ஓட்டங்களையும், ஓசதி ரணசிங்க 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இவர்களின் இந்த துடுப்பாட்ட பிரகாசித்து வெற்றியிலக்கை அடைய போதுமானதாக அமையாத நிலையில், இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

இந்திய அணியின் பந்துவீச்சை பொருத்தவரை டிடாஸ் சது மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதல் பதக்கத்தை இலங்கை மகளிர் அணி வென்றுக்கொடுத்ததுடன், மகளிருக்கான T20 கிரிக்கெட்டின் வெண்கலப்பதக்கத்தை பங்களாதேஷ் அணி வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Result


India Women
116/7 (20)

Sri Lanka Women
97/8 (20)

Batsmen R B 4s 6s SR
Smriti Mandhana c Udeshika Prabodhani b Inoka Ranaweera 46 45 4 1 102.22
Shafali Verma st Anushka Sanjeewani b Sugandika Kumari 9 15 1 0 60.00
Jemimah Rodrigues c Vishmi Gunaratne b Udeshika Prabodhani 42 40 5 0 105.00
Richa Ghosh c Anushka Sanjeewani b Inoka Ranaweera 9 6 0 1 150.00
Harmanpreet Kaur c Anushka Sanjeewani b Udeshika Prabodhani 2 5 0 0 40.00
Pooja Vastrakar c Vishmi Gunaratne b Sugandika Kumari 2 4 0 0 50.00
Deepti Sharma not out 1 3 0 0 33.33
Amanjot Kaur run out (Anushka Sanjeewani) 1 2 0 0 50.00


Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 116/7 (20 Overs, RR: 5.8)
Bowling O M R W Econ
Oshadi Ranasinghe 2 0 11 0 5.50
Udeshika Prabodhani 3 0 16 2 5.33
Inoshi Priyadarshani 3 1 1 0 0.33
Sugandika Kumari 4 0 30 2 7.50
Chamari Athapaththu 2.5 0 19 0 7.60
Kavisha Dilhari 1.1 0 7 0 6.36
Inoka Ranaweera 4 0 21 2 5.25


Batsmen R B 4s 6s SR
Chamari Athapaththu c Deepti Sharma b Titas Sadhu 12 12 1 1 100.00
Anushka Sanjeewani c Harmanpreet Kaur b Titas Sadhu 1 5 0 0 20.00
Vishmi Gunaratne b Titas Sadhu 0 3 0 0 0.00
Hasini Perera c Pooja Vastrakar b Rajeshwari Gayakwad 25 22 4 1 113.64
Nilakshi de Silva b Pooja Vastrakar 23 34 1 1 67.65
Oshadi Ranasinghe c Titas Sadhu b Deepti Sharma 19 26 2 0 73.08
Kavisha Dilhari c Richa Ghosh b Devika Vaidya 5 8 0 0 62.50
Sugandika Kumari st Richa Ghosh b Rajeshwari Gayakwad 5 8 0 0 62.50
Inoshi Priyadarshani not out 1 1 0 0 100.00
Udeshika Prabodhani not out 1 1 0 0 100.00


Extras 5 (b 2 , lb 3 , nb 0, w 0, pen 0)
Total 97/8 (20 Overs, RR: 4.85)
Bowling O M R W Econ
Deepti Sharma 4 0 25 1 6.25
Pooja Vastrakar 4 1 20 1 5.00
Titas Sadhu 4 1 6 3 1.50
Rajeshwari Gayakwad 3 0 20 2 6.67
Amanjot Kaur 1 0 6 0 6.00
Devika Vaidya 4 0 15 1 3.75



>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<