ஐந்தாண்டு தடைக்குப் பின் மீண்டும் சர்வதேசப் போட்டிகளுக்கு தயாராகும் அஷ்ரபுல்

704

உள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தனக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு கால தடைக்கு பிறகு பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மொஹமட் அஷ்ரபுல் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டிற்கு திரும்புகிறார்.

சகிப் அல் ஹசன் ஆசிய போட்டியில் விளையாடுவது சந்தேகம்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான…

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களுள் ஒருவராக இருந்த மொஹமட் அஷ்ரபுல், கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமீயர் லீக் டி-20 போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார். இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி அஷ்ரபுல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 8 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் அஷ்ரபுலுக்கு 10 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  

இந்த நிலையில் அதே வருடம் செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகக்குழு, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் அஷ்ரபுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. இதனிடையே எதிர்வரும் 13ஆம் திகதியுடன் அஷ்ரபுலுக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு கால போட்டித் தடை முடிவடைகிறது.

இதனையடுத்து, பங்களாதேஷ் அணியில் விளையாடுவதற்கான அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் தேசிய அணியில் இடம்பிடிப்பேன் என்றும் 34 வயதாகும் அஷ்ரபுல் கடந்த சில தினங்களுக்கு முன் டாக்காவில் உள்ள ஷெர்ரி பங்களா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘நான் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. நீண்ட நாட்களாக ஆகஸ்ட் 13ஆம் திகதி வரும் வரை காத்திருக்கிறேன். கடந்த இரண்டு பருவாகலங்களிலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறேன். தற்போது தேசிய அணியில் இடம்பெறுவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. இனிமேல் நான் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. மீண்டும் பங்களாதேஷ் அணிக்காக விளையாடுவது என்னுடைய மிகச்சிறந்த சாதனையாக இருக்கும்எனக் கூறினார்.

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) தொடருக்கு ஐசிசி அங்கீகாரம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்த திட்டமிட்டிருந்த..

இதேவேளை, கடந்த 2016இல் இருந்து உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாட அவருக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் அஷ்ரபுல் 23 முதல்தர ஏ போட்டிகளில் விளையாடி சராசரியாக 47.63 என்ற ஓட்ட வேகத்துடன் 4 சதங்களை குவித்துள்ளார். ஆனால், முதல்தரப் போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிய அவர், குறித்த காலப்பகுதியில் 13 முதல்தர போட்டிகளில் விளையாடி ஒரேயொரு சதத்தினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷின் டி.சி.எல் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அஷ்ரப்புல்

இதேவேளை, அஷ்ரப்புல்லின் இந்த அறிவிப்புக்கு அந்நாட்டு தேர்வுக் குழுவின் தலைவர் மின்ஹாஜுல் ஆப்டீன் கருத்து வெளியிடுகையில்,

தற்போதைய தருணத்தில் தேசிய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்குவது கடினமான விடயம். உண்மையில் தேசிய அணிக்காக வீரரொருவரை தேர்வு செய்வதற்கு நாங்கள் உயர்ந்த தரத்திலான உடற்தகுதிகளை வீரர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். அதிலும் குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு மாத்திரம் பங்களாதேஷ் அணியிலும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அந்த இலக்கை அடைவதற்கு அவருக்கு சிறிது காலம் தேவைப்படும். அவ்வாறு இலக்கினை அவர் அடைந்தால் மட்டுமே அவரை அணிக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்க முடியும். இப்போது அவர் எங்கிருந்தாலும் நாங்கள் அவரை பற்றி ஒருபோதும் சிந்திக்கவில்லைஎன்று அவர் கூறினார்.

புதிய பயணம்: ரஷ்யாவில் இருந்து கண்டிக்கு, கண்டியில் இருந்து கொழும்புக்கு

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க…

உண்மையில் ந்தவொரு விளையாட்டிலும் உள்ள முக்கிய பிரச்சினை இந்த வயது மற்றும் வீரர்களின் உடற் தகுதியாகும். ஒருபுறத்தில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான 34 வயதான லசித் மாலிங்க உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். ஆனால் தேசிய அணியில் இருந்து மாலிங்க தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

அதேபோல, அஷ்ரப்புல்லின் கிரிக்கெட் எதிர்காலம் அமைந்துள்ளது. எவ்வாறிருப்பினும், பங்களாதேஷ் உள்ளூர் போட்டிகளில் கடந்த மூன்று வருடங்களாக அஷ்ரபுல் திறமைகளை வெளிப்படுத்தி வந்தாலும், அவர் தேசிய அணிக்கு தனது முழு உடற்தகுதியையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பங்களாதேஷ் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 8 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 2,737 ஓட்டங்களைக் குவித்துள்ள அஷ்ரப்புல், 178 ஒரு நாள் போட்டிகளிலும், 23 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<