ஹெட்ரிக் சாதனையுடன் சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்த அன்ரோ ரசல்

1440
Andre Russell
@ICC

மேற்கிந்திய தீவுகளில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (11) நடைபெற்ற ஜமைக்கா டளாவாஸ் மற்றும் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி உலகளாவிய ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது.

கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஒருவருட தடைக்கு முகங்கொடுத்துள்ள முன்னாள்…

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது போட்டியில், இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தலைமையில் கடந்த பருவகாலங்களில் விளையாடிய ஜமைக்கா டளாவாஸ் அணிக்கு தற்போது அதிரடி துடுப்பாட்ட வீரர் அன்ரோ ரசல் கடமையேற்றுள்ளார். இந்த அணியுடன் டெவைன் பிராவோ தலைமையிலான டிரின்பகோ நைட் ரைடர்ஷ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டிரின்பகோ நைட் ரைடர்ஷ் அணி நிர்ணயித்திருந்த 224 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா அணி 19.3 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த T-20 கிரிக்கெட் வரலாற்றிலும், துரத்தியடிக்கப்பட்டுள்ள ஆறாவது அதிகூடிய வெற்றியிலக்காக இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

ஆனால், நாம் பார்க்கவுள்ள சாதனை அணியின் ஓட்ட எண்ணிக்கையின் சாதனையல்ல. அந்த அணியின் தலைவரான அன்ரோ ரசலின் சாதனையைதான். இவ்வருடம் தங்களது முதல் போட்டியில் ஜமைக்கா டளாவாஸ் அணி விளையாடியது. அன்ரே ரசலின் தலைமைத்துவத்தில் விளையாடும் முதல் போட்டியாகவும் இந்த போட்டி அமைந்திருந்தது.

இதில் T-20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் மற்றும் ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அன்ரோ ரசல் பெற்றுக்கொண்டுள்ளார். சர்வதேச T-20 போட்டிகளில் ஹெட்ரிக் தனியாக மற்றும் சதத்தை தனியாக விளாசி பல சாதனைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

அசேலவின் சகலதுறை ஆட்டத்தால் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கைத்தரப்பு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க வளரந்து வரும் அணிக்கும்…

ஆனால், ஒரே வீரர் இரண்டையும் நிகழ்த்திய வெறும் இரண்டாவது தருணம் இதுதான். இதற்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெறும் T-20 பிளாஸ்ட் தொடரில் கடந்த மாதம் இந்த சாதனை புதிதாக பதியப்பட்டது. சர்ரே அணிக்கெதிரான போட்டியில் ஜோ டென்லி 63 பந்துகளுக்கு 103 ஓட்டங்களை விளாசியதுடன், ஹெட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் இறுதி ஓவரை வீசிய அன்ரோ ரசல் ஓவரின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சரித்து, ஹெட்ரிக் சாதனையை படைத்தார். இதில் அதிரடியாக பிரெண்டன் மெக்கலம், டெரன் பிராவோ மற்றும் புதிதாக களம் நுழைந்த தினேஷ் ராம்டீன் ஆகியோரின் விக்கெட்டுகளை ரசல் கைப்பற்றியிருந்தார்.

பின்னர், மிக சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டளாவாஸ் அணி ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒருகட்டத்தில் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்த அணி, தங்களது வெற்றி வாய்ப்பை முற்றுமுழுதாக இழந்திருந்தது. ஆனால், ளாவாஸ் அணியின் தலைவர் அன்ரோ ரசல் களமிறங்கிய பின்னர் போட்டியின் போக்கு, முற்றுமுழுதாக மாறிவிட்டது. அணித் தலைவர் என்ற இடத்திலிருந்து அவர் ஆடிய விதம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது.

தனக்கே உரிய பாணியில் சிக்ஸர்களையும், பௌண்டரிகளையும் விளாசிய ரசல் T-20 அரங்களில் தனது முதலாவது சதத்தை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 40 பந்துகளில் சதம் கடந்த ரசல், கரீபியன் பிரீமியர் லீக்கில் வேகமாக பெறப்பட்ட சதம் என்ற சாதனையையும் பதிவுசெய்தார்.

போட்டியின் இறுதிவரை களத்தில் நின்ற ரசல் வெறும் 49 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 121 ஓட்டங்களை விளாசினார். மறுபக்கம் அவருக்கு பக்கபலமாக லிவிஸ் அரைச்சதம் பெற்றுக்கொடுத்தாலும், வெற்றியின் முழு பொறுப்பையும், அணித் தலைவராக ரசல் ஏற்றுக்கொண்ட விதம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

முக்கியமாக போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ரசல் 13 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளை விளாசியமையானது கண்களுக்கு விருந்தளி்த்தது.

இத்தனைக்கும், கடந்த வரும் தடை காரணமாக கரீபியன் பிரீமியர் லீக்கில் ரசல் விளையாடியிருக்கவில்லை. எனினும் அவரை நம்பிய அணி நிர்வாகம் குமார் சங்கக்கார மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் வகித்த தலைமை பதவியை இவ்வருடம் அவருக்கு வழங்கியிருந்தது. அணி நிர்வாகம் தன்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு, ஒரு வீரரால் இப்படி பரிசளிக்க முடியுமென்றால் அது மிகையாகாது. அதுவும் தனது தலைமைத்துவத்தின் முதல் போட்டியில் சதம் மற்றும் ஹெட்ரிக் என்றால் அதனை சொல்வதற்கு வார்த்தைகள் போதாது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<