இலங்கை அணியில் மீண்டும் களமிறங்கவுள்ள அமில அபொன்சோ

921
Amila Aponso

இடது கை சுழல் வீரர்களில் ஒருவரான அமில அபொன்சோ, காலியில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணியுடனான முதல் இரண்டு போட்டிகளுக்குமான இலங்கை குழாத்தில் மேலதிக வீரர்களில் ஒருவராக இணைக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வேயை எதிர்கொள்ள பல மாற்றங்களுடனான இலங்கைக் குழாம்

ஜிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்குமான…

இதற்கு முன்னர், முதல் இரண்டு போட்டிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் சபையானது 13 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருந்தது. அபொன்சோவின் உள்ளடக்கடத்துடன் இப்பட்டியலானது 14 வீரர்களைக் கொண்டதாக மாறியுள்ளது. மேலும், இலங்கை அணித் தலைவரிற்கு இதன் மூலம் அணியில் மூன்று முன்வரிசை சுழல் பந்து வீச்சாளர்களினை வைத்திருக்கும் வாய்ப்பும் கிட்டியிருக்கின்றது.

என்னிடம் (அணியில்), இருக்கும் அமில அபொன்சோ, லக்ஷன் சந்தகன் மற்றும் அகில தனன்ஞய ஆகிய மூன்று சுழல் வீரர்களும் மிகவும் தரமான ஆட்டத்தினை காட்டக்கூடியவர்கள். நாளை காலை மைதானத்தின் நிலைமைகளினை அவதானித்து, யார் (விளையாட) பொருத்தமானவர்கள்  என்பதை தெரிவு செய்யவுள்ளேன்.”

என இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியொன்றில் கடந்த வருடம் அறிமுகமாகியிருந்த அமில அபொன்சோ, அவ்வணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் ஐந்து போட்டிகளிலும் விளையாடி இருந்ததோடு 25.85 என்கிற சராசரியில் 7 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

எதிரணியை கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீசும் ஆற்றலினை தன்னகத்தே தனித்துவமாக வைத்திருக்கும் அபொன்சோ, ஒரு ஓவரிற்கு சராசரியாக 4.17 ஓட்டங்களினை மாத்திரமே கொடுத்திருக்கின்றார். இவ்வாறான சிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்தும், அபொன்சோவிற்கு இலங்கை அணி இறுதியாக விளையாடிய நான்கு ஒரு நாள் தொடர்களிலும் வாய்ப்பு அளிக்கப்படாது விடப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை.

ஜிம்பாப்வேயுடனான தொடரில் இருந்து முழுமையாக நீக்கப்பட்ட குசல் பெரேரா

இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, நாளை ஆரம்பமாகும் ஜிம்பாப்வே அணியுடனான…

இலங்கை அணியில் அறிமுகமானதைத் தொடர்ந்து, இவ்வருட ஆரம்பத்தில் அபொன்சோ இலங்கை A அணி மற்றும் இலங்கை இளையோர் அணி ஆகியவற்றினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார்.

மொரட்டுவ செபஸ்டியன் கல்லூரியின் முன்னாள் அணித் தலைவரான அபொன்சோ, தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் றாகம அணிக்காக விளையாடி வருகின்றார். இதுவரை முதல்தர போட்டிகளில் 162 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருக்கும் அபொன்சோ, 52 விக்கெட்டுக்களை List A போட்டிகளிலும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.