தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான மே.தீவுகள் குழாம் அறிவிப்பு

West Indies tour of South Africa 2023

101

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் முதன்முறையாக வேகப்பந்துவீச்சாளர் அகீம் ஜோர்டன் அழைக்கப்பட்டுள்ளதுடன், துடுப்பாட்ட வீரர் அலிக் அதனேஷிற்கும் முதன்முறையாக அணியில் இடம் கிடைத்துள்ளது.

இலங்கை வீராங்கனைக்கு அபராதம் விதித்த ஐசிசி

புதிய வீரர்கள் இருவர் அணியில் இடம்பிடித்துள்ளதுடன், சுழல் பந்துவீச்சாளர் ஜோமல் வரிகன் மற்றும் குரூமா போனர் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் ஜெய்டன் சீல்ஸ் உபாதையிலிருந்து மீண்டுவருவதால் அணியில் இணைக்கப்படவில்லை என்பதுடன், மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் அண்டர்சன் பிலிப் உடற்தகுதியுடன் இல்லை என மேற்கிந்திய தீவுகள் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

அணியின் தலைவராக தொடர்ந்தும் கிரைக் பிராத்வைட் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவராக ஜெர்மைன் பிலக்வூட் பெயரிடப்பட்டுள்ளார். இவர்களுடன் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் அடித்திருந்த டெகனரைன் சந்திரபோல், ரொஸ்டன் சேஸ், ஜொசுவா டி சில்வா போன்ற முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பந்துவீச்சாளர்களை பொருத்தவரை டெவோன் தோமஸ், கெமார் ரோச்,  செனோன் கேப்ரியல் மற்றும் அல்ஷாரி ஜோசப் போன்ற வேகப்பந்துவீச்சாளர்ளும், வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர்களாக ஜேசன் ஹோல்டர் மற்றும் கெயல் மேயர்ஸ் போன்ற வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

கிரைக் பிராத்வைட் (தலைவர்), ஜெர்மைன் பிளக்வூட், அலிக் அதனெஷ், டெகனரைன் சந்திரபோல், ரொஸ்டன் சேஸ், ஜொசுவா டி சில்வா, ஷெனொன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அகீம் ஜோர்டன், அல்ஷாரி ஜோசப், கெயல் மேயர்ஸ், குடகேஷ் மொடீ, ரெய்மன் ரீபர், கெமார் ரோச், டெவோன் தோமஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<