ஒருநாள் போட்டியில் 257 ஓட்டங்களை விளாசிய அவுஸ்திரேலிய வீரர்

668
Image courtesy - Cricket Australia

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஜே.எல்.டி கிண்ண கிரிக்கெட் தொடரில் (JLT Cup)வெஸ்டர்ன் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிய டி ஆர்சி ஷோர்ட் 257 ஓட்டங்களை விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை தோற்றாலும் ஆசிய கிண்ணத்தில் சாதனை படைத்த மாலிங்க

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய..

குயின்ஸ்லாந்து மற்றும் வெஸ்டர்ன் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஜே.எல்.டி கிண்ணத் தொடருக்கான லீக் போட்டி இன்று ஹர்ஸ்ட்வில் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எதிரணி பந்து வீச்சாளர்களை தினறடித்த ஆர்சி ஷோர்ட் 148 பந்துகளில் 23 சிக்ஸர்கள் மற்றும் 15 பௌண்டரிகள் அடங்கலாக 257 ஓட்டங்களை விளாசினார். இதனடிப்படையில், நிலைக் கிரிக்கெட் (List A) போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிசார்பில் அதிகூடிய ஓட்டங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை ஆர்சி ஷோர்ட் பெற்றுக்கொண்டார்.

போட்டியில் தனியொரு ஆளாக அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்த இவர், சதத்தை 83 பந்துகளில் நிறைவுசெய்ததுடன், இரட்டைச் சததத்தை 128 பந்துகளில் கடந்தார். மொத்தமாக 257 ஓட்டங்களை பெற்ற இவர், 200-250 ஓட்டங்களை கடப்பதற்கு வெறும் 16 பந்துகளை மாத்திரமே எடுத்துக்கொண்டார். இவரின் இந்த துடுப்பாட்டத்துடன் 387 ஓட்டங்களை பெற்ற வெஸ்டர்ன் அவுஸ்திரேலிய அணி போட்டியில் 116 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அத்துடன் இன்றைய போட்டியில் இரட்டைச்சதம் விளாசிய ஷோர்ட், அவுஸ்திரேலிய அணிசார்பில் ஏ நிலை போட்டிகளில் இரட்டைச்சதம் கடந்த நான்காவது வீரர், ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளிலும் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற மூன்றாவது வீரர் என்ற சாதனைகளுடன், முதற்தரப் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய சிக்ஸர்கள் விளாசிய கொலின் முன்ரோவின் சாதனையையும் சமப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் குழாத்திலிருந்து மொஹமட் ஆமீர் நீக்கம்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக…..

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஏ நிலைப் போட்டிகளில் பென் டன்க், பிலிப் யூஜஸ், ட்ராவிஷ் ஹெட் ஆகியோரை தொடர்ந்து ஆர்சி ஷோர்ட் இரட்டைச்சதம் கடந்துள்ளார். இதில் பென் டன்க் பெற்றிருந்த அதிகூடிய 229 ஓட்டங்களை ஷோர்ட் கடந்து முதலிடத்தை பிடித்துள்ளார். இதனுடன், ஏ நிலைப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை விளாசிய பட்டியலில் இங்கிலாந்து வீரர் அலி பிரவ்ன் மற்றும் இந்திய வீரர் ரோஹித் சர்மாவை அடுத்து மூன்றாவது இடத்தை ஆர்சி ஷோர்ட் பிடித்துக் கொண்டுள்ளார்.

நிலைப் போட்டிகளின் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர்கள்

  • அலெஸ்டெயார் பிரவ்ன் – 268 – சர்ரே எதிர் கிளாமர்கன் – 2002
  • ரோஹித் சர்மா – 264 – இந்தியா எதிர் இலங்கை – 2014
  • டி ஆர்சி ஷோர்ட் – 257 – வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா எதிர் குயின்ஸ்லாந்து – 2018
  • சிக்கர் தவான் – 248 – இந்தியா எதிர் தென்னாபிரிக்கா – 2013
  • மார்டின் குப்டில் – 237* – நியூசிலாந்து எதிர் மே.தீவுகள் – 2015

இதேநிலையில், கொலின் மன்ரோ 2015ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற முதற்தர உள்ளூர் போட்டியில், அக்குலேண்ட் அணிக்காக விளையாடி 23 சிக்ஸர்களை விளாசியிருந்த சாதனையையும், ஷோர்ட் இன்று சமப்படுத்தியுள்ளார். கொலின் மன்ரோ சென்ட்ரல் டிஸ்ட்ரிக் அணிக்கு எதிரான போட்டியில் 23 சிக்ஸர்களை விளாசி, இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய சிக்ஸர்களை விளாசியவர் என்ற சாதனையை கைவசப்படுத்தியிருந்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<