Home Tamil சத்ரானின் ஆட்டத்தோடு ஆப்கான் ஒருநாள் தொடரில் முன்னிலை

சத்ரானின் ஆட்டத்தோடு ஆப்கான் ஒருநாள் தொடரில் முன்னிலை

204

சுற்றுலா இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் இப்ராஹிம் சத்ரானின் அபார ஆட்டத்தோடு 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆப்கான் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

>>உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக தயாராகத் தொடங்கும் இலங்கை<<

இலங்கை – ஆப்கான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (02) ஹம்பாந்தோட்டை சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கான் தலைவர் ஹஸ்மத்துல்லா சஹிதி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார்.

இப்போட்டியின் மூலம் குட்டி மாலிங்க என அழைக்கப்படும் மதீஷ பத்திரன ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் பெற்றதோடு, சுழல் சகலதுறைவீரரான துஷான் ஹேமன்தவும் சர்வதேச அரங்கில் முதல் தடவையாக அறிமுகம் பெற்றிருந்தார்.

இலங்கை திமுத் கருணாரட்ன, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (அணித்தலைவர்), துஷான் ஹேமன்த, லஹிரு குமார, மதீஷ பதிரன, கசுன் ராஜித

ஆப்கானிஸ்தான் ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), ரஹ்மத் சாஹ், றஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான், மொஹமட் நபி, அஷ்மத்துல்லா ஓமர்சாய், முஜிபுர் ரஹ்மான், நூர் அஹ்மட், பசால்ஹக் பரூக்கி, பரீட் அஹ்மட்

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பம் அமைந்திருக்கவில்லை. அணியின் ஆரம்பவீரர்களில் ஒருவராக களம் நுழைந்த திமுத் கருணாரட்ன வெறும் 04 ஓட்டங்களுடன் ஓய்வறை நடக்க, அதன் பின்னர் புதிய வீரராக களம் நுழைந்த குசல் மெண்டிஸ் 11 ஓட்டங்களுடன் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார்.

குசல் மெண்டிஸின் பின்னர் களம் வந்த அஞ்செலோ மெதிவ்ஸ் தனது விக்கெட்டினை அவர் 12 ஓட்டங்களைப் பெற்ற சந்தர்ப்பத்தில் பறிகொடுத்ததோடு, அணிக்கு ஆரம்பவீரராக வந்து நம்பிக்கை தந்த பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டும் அவர் 38 ஓட்டங்களுடன் இருந்த நிலையில் வீழ்த்தப்பட்டது. இதனால் இலங்கை அணி ஒரு கட்டத்தில் 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் இந்த தருணத்தில் இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க ஜோடி பொறுப்பான முறையில் ஆடியதோடு இலங்கை அணியின் 5ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 99 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

தொடர்ந்து இந்த இணைப்பாட்டத்திற்கு காரணமாக அமைந்த தனன்ஞய டி சில்வா தனது விக்கெட்டினை பறிகொடுக்க முன்னர் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 9ஆவது அரைச்சதத்துடன் 59 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இதன் பின்னர் சரித் அசலன்க இலங்கை அணியினைப் பலப்படுத்த இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதத்தினை 09 ஓட்டங்களால் தவறவிட்ட சரித் அசலன்க 95 பந்துகளில் 12 பெளண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்கள் எடுத்தார். இது அசலன்கவின் ஆறாவது ஒருநாள் அரைச்சதமானது. இதேநேரம் பின்வரிசையில் பெறுமதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய துஷான் ஹேமன்த 20 பந்துகளில் ஒரு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 22 ஓட்டங்கள் பெற்றார்.

ஆப்கான் பந்துவீச்சில் பஷால்ஹக் பரூக்கி மற்றும் பரீட் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 269 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி இப்ராஹிம் சத்ரான் மற்றும் றஹ்மத் சாஹ் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களோடு போட்டியின் வெற்றி இலக்கை 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களுடன் அடைந்தது.

>>இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு<<

ஆப்கான் அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் இப்ராஹிம் சத்ரான் 98 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 98 ஓட்டங்கள் எடுக்க, றஹ்மத் சாஹ் தன்னுடைய 23ஆவது அரைச்சதத்தோடு 55 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் மதீஷ பதிரன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சத்ரான் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
268/10 (50)

Afghanistan
269/4 (46.5)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Hashmatullah Shahidi b Mujeeb ur Rahman 38 59 5 0 64.41
Dimuth Karunaratne c Rahmat Shah b Fazal Haq Farooqi 4 6 1 0 66.67
Kusal Mendis c Rahmat Shah b Fazal Haq Farooqi 11 17 2 0 64.71
Angelo Mathews c Rahmanullah Gurbaz b Fareed Ahmad 12 21 0 0 57.14
Charith Asalanka run out (Rahmanullah Gurbaz) 91 95 12 0 95.79
Dhananjaya de Silva b Mohammad Nabi 51 59 5 0 86.44
Dasun Shanaka b Noor Ahmad 17 16 1 0 106.25
Dushan Hemantha c Noor Ahmad b Fareed Ahmad 22 20 1 1 110.00
Lahiru Kumara not out 4 5 0 0 80.00
Kasun Rajitha b Azmatullah Omarzai 0 1 0 0 0.00
Matheesha Pathirana run out (Hashmatullah Shahidi) 1 2 0 0 50.00


Extras 17 (b 0 , lb 2 , nb 1, w 14, pen 0)
Total 268/10 (50 Overs, RR: 5.36)
Fall of Wickets 1-6 (2.2) Dimuth Karunaratne, 2-38 (8.2) Kusal Mendis, 3-61 (14.4) Angelo Mathews, 4-84 (19.2) Pathum Nissanka, 5-183 (37.1) Dhananjaya de Silva, 6-215 (42.5) Dasun Shanaka, 7-263 (48.4) Dushan Hemantha, 8-264 (49.1) Charith Asalanka, 9-264 (49.2) Kasun Rajitha, 10-268 (49.6) Matheesha Pathirana,

Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 9 0 58 2 6.44
Azmatullah Omarzai 8 1 35 1 4.38
Fareed Ahmad 8 0 43 2 5.38
Mujeeb ur Rahman 10 1 45 1 4.50
Noor Ahmad 8 0 54 1 6.75
Mohammad Nabi 7 0 31 1 4.43


Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz b Lahiru Kumara 14 23 2 0 60.87
Ibrahim Zadran c Sadeera Samarawickrama b Kasun Rajitha 98 98 11 2 100.00
Rahmat Shah c Dhananjaya de Silva b Matheesha Pathirana 55 80 3 0 68.75
Hashmatullah Shahidi c Kusal Mendis b Kasun Rajitha 38 47 4 0 80.85
Mohammad Nabi not out 27 28 4 0 96.43
Najibullah Zadran not out 7 6 1 0 116.67


Extras 30 (b 1 , lb 6 , nb 1, w 22, pen 0)
Total 269/4 (46.5 Overs, RR: 5.74)
Fall of Wickets 1-25 (5.2) Rahmanullah Gurbaz,

Bowling O M R W Econ
Kasun Rajitha 10 0 49 2 4.90
Lahiru Kumara 4.3 1 21 1 4.88
Matheesha Pathirana 8.5 0 66 1 7.76
Dasun Shanaka 4.3 0 32 0 7.44
Dushan Hemantha 9 0 50 0 5.56
Dhananjaya de Silva 10 0 44 0 4.40



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<