உலகக்கிண்ணத்தில் இந்தியாவுடனான தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – இன்சமாம்

131
Image Courtesy - AFP/GETTY

உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை இம்முறை மாற்றி எழுதுவோம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய தேர்வுக் குழுவின் தலைவருமான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை உலகக் கிண்ணத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியைத் தான் இரு அணி ரசிகர்களும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். உலகக் கிண்ணம் போன்ற தொடரைக் காட்டிலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாலே போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை இளையோர் பாகிஸ்தானை வீழ்த்தினர்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது

அத்துடன், இதுவரை நடைபெற்றுள்ள உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை வென்றதில்லை. சுமார் ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் இந்த சோதனை பாகிஸ்தான் அணியை பின்தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை வீழ்த்தும் என்ற நம்பிக்கை இருப்பதாக இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் இந்திய அணியை உலகக் கிண்ணத்தில் வீழ்த்தினால் மட்டுமே நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று கூட கூறுகிறார்கள்.

எனினும், பாகிஸ்தான் மக்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் இந்த தொடர் தோல்விக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் முற்றுப்புள்ளி வைப்போம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்தியாவை வீழ்த்துவதை போல் மற்ற அணிகளையும் வீழ்த்துகின்ற பலம் பாகிஸ்தான் அணியிடம் உள்ளது.

இதேநேரம், பாகிஸ்தான் அணித் தேர்வு குறித்து கருத்து வெளியிட்ட இன்சமாம் உல் ஹக், 15 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியை தேர்வு செய்வது என்பது இலகுவான விடயம் என ரசிகர்கள் நினைக்கிறார்கள். அது ஒன்றும் அப்படி அல்ல. ஏனென்றால், ஏகப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் தான் இறுதி குழாத்தை நாங்கள் தெரிவு செய்கின்றோம். உதாரணமாக வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், மொஹமட் அமிர், ஜுனைத் கான், உஸ்மான் ஷின்வாரி போன்ற வீரர்கள் பட்டியலில் இருந்தனர்.

ஆனாலும், மிகப் பெரிய அவதானத்தை எடுத்து மொஹமட் ஹஸ்னைனையும், வஹாப் ரியாஸையும் உலகக் கிண்ண குழாத்தில் தேர்வு செய்தோம். இவர்களுள் புதிய கோணத்தில் பந்துவீசும் ஹஸ்னைன் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர். மற்ற பந்துவீச்சாளர்கள் சராசரியாக 130 முதல் 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறன் படைத்தவர்கள் என தெரிவித்தார்.

முன்னதாக உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணியில் கடைசி நேரத்தில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டனர். இதனால் இன்சமாம் உல் ஹக் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போது பாகிஸ்தான் அணி படுமோசமான நிலைமையில் இருக்கிறது. கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் தோல்வி கண்டது. மேலும், பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடமும் தோல்வியைத் தழுவியது. எனவே, பாகிஸ்தான் அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்குத் தகுதி பெறாவிட்டாலும், இந்திய அணியை வீழ்த்தி விட வேண்டும் என்ற கங்கனத்துடன் இந்தியாவை சந்திக்கவுள்ளது.

உலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ள அணித் தலைவர்கள் பற்றிய சிறப்புப் பார்வை

கிரிக்கெட் உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் 30ஆம்

இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வி குறித்து இன்சமாம் கருத்து வெளியிடுகையில், உலகக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரை சிறிய அணிகள், பெரிய அணிகள் என எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்.

அதேநேரம், ஆப்கானிஸ்தான் வென்றாலும், இங்கிலாந்தை வென்றாலும் கிடைப்பது 2 புள்ளிகள் தான். ஆனால் எந்த அளவுக்குப் போட்டியில் நெருக்கடி கொடுத்து வெற்றி பெறுவது என்பதுதான் இங்கு முக்கியமாக உள்ளது.

எனவே, ஆப்கானிஸ்தான் அணியுடனான பயிற்சிப் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், உலகக் கிண்ணப் போட்டிகளை வெற்றியுடன் ஆரம்பிப்பதற்கு எமது வீரர்கள் தயாராக உள்ளனர். அதிலும் முதல் போட்டியில் வெற்றிபெறுவதென்பது மிகவுத் முக்கியம். அந்த வெற்றியைப் பெறுவதற்கு எமது அணி தயார்நிலையில் உள்ளது. அத்துடன், எனது கணிப்பின்படி இம்முறை உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதிபெறும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண லீக் ஆட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி மென்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க