இலங்கையில் நடைபெறவிருந்த ஆப்கான் – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

126
Getty Images

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக ஒழுங்கு செய்யப்பட்ட மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் காலவரையின்றி பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எவரஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் களமிறங்கும் சீக்குகே பிரசன்ன

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் பங்குபெறும் ஒருநாள் தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த திட்டமிடப்பட்ட போதும் அங்கே இந்த ஒருநாள் தொடருக்கு ஒதுக்கப்பட்ட காலப்பகுதியில், இந்த ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் எஞ்சிய போட்டிகள் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்ட காரணத்தினால் ஒருநாள் தொடரை செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இலங்கையில் நடாத்துவற்கு தீர்மானிக்கப்பட்டது. 

எனினும், நிலைமைகள் இவ்வாறு இருக்க ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் குளறுபடிகள் காரணமாக இலங்கையில் நடாத்தப்படவிருந்த இந்த ஒருநாள் தொடர், பாகிஸ்தானில் நடாத்தப்படும் என குறிப்பிடப்பட்ட போதும் அது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் மனநிலை மற்றும் தொடரினை நடாத்தும் போது ஏற்படும் பொருட்சிக்கல் என்பவற்றினை கருத்திற்கொண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்க தொடருக்கான 30 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

அதேநேரம், ஒத்திவைக்கப்பட்ட இந்த ஒருநாள் தொடரினை 2022ஆம் ஆண்டில் நடாத்த ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் இணக்கம் கொண்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…