இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான் தகுதி

68
Photo - ACC

தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் 19 வயதின்கீழ்ப்பட்டோருக்கான (இளையோர்) ஆசியக் கிண்ணத் தொடரின் குழு B அணிகளுக்கான இரண்டு போட்டிகள் இன்று (7) நிறைவுக்கு வந்தன. 

இந்தியா எதிர் பாகிஸ்தான் 

மொரட்டுவ டெரோன் பெர்னாந்து மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினை 60 ஓட்டங்களால் வீழ்த்தியது.

இலங்கை – பங்களாதேஷ் வளர்ந்துவரும் டெஸ்ட் சமநிலையில் நிறைவு

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும்…..

இப்போட்டியில் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி பெற்றுக் கொண்ட வெற்றி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் அவர்கள் பெற்ற இரண்டாவது வெற்றியாகவும் அமைந்தது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு அர்ஜூன் அஸாட் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சதங்களை பெற்றுக் கொடுத்தனர். இதில் அர்ஜூன் அஸாட் 121 ஓட்டங்களை குவிக்க, திலக் வர்மா 110 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. 

இதேநேரம், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்துவீச்சு சார்பாக நஸீம் சாஹ் மற்றும் அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 306 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 245 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் 60 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது. 

இளையோர் ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

இந்தப் பருவகாலத்திற்கான இளையோர் ஆசியக் கிண்ண…..

பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் ரோஹைல் நஸீர் சதம்பெற்று 117 ஓட்டங்கள் குவித்த போதும் அவரது துடுப்பாட்டம் வீணாகியிருந்தது. 

மறுமுனையில் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக அதர்வா ஆன்க்கலோக்கேர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், வித்யாஹர் பாட்டில் மற்றும் சுஷாந்த் மித்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர். 

இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இரண்டு வெற்றிகளுடன் தெரிவாக, பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் இரண்டு தோல்விகளுடன் அரையிறுதி வாய்ப்பினை இழந்திருக்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 305/9 (50) : அர்ஜூன் அஸாட் 121, திலக் வர்மா 110, நஸீம் சாஹ் 52/3, அப்பாஸ் அப்ரிடி 72/3

பாகிஸ்தான் – 245/10 (46.4) : றோஹைல் நஸீர் 117, அதர்வா ஆன்க்கலோக்கேர் 36/3, வித்யாஹர் பாட்டில் 28/2, சுஷாந்த் மிஷ்ரா 37/2 

முடிவு – இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 60 ஓட்டங்களால் வெற்றி 

Photos: India Vs Pakistan | Under 19 Asia Cup 2019


ஆப்கானிஸ்தான் எதிர் குவைட் 

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் குழு B அணிகளுக்கான மற்றைய மோதலில் ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி, குவைட் 19 வயதுக்குட்பட்ட அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் இரண்டு வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு தெரிவாகிய இரண்டாவது அணியாக மாறியது.

Photos : Sri Lanka Vs Nepal | Under 19 Asia Cup 2019

ThePapare.com | Hiran Chandika | 07/09/2019 Editing and re-using….

மறுமுனையில் இப்போட்டியில் தோல்வியுற்ற குவைட் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி பாகிஸ்தான் போன்று இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த குவைட் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 27.3 ஓவர்களில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 85 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. 

குவைட் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் மீட் பவ்ஸர் 20 ஓட்டங்களுடன் தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்ய, ஏனைய அனைவரும் மிகவும் குறைவான ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் சபிகுல்லாஹ் காபாரி 3 விக்கெட்டுக்களையும், நூர் அஹ்மட் மற்றும் பசால் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 86 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி குறித்த இலக்கினை 12.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது. 

ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியின் வெற்றியினை அதன் தலைவரான பர்ஹான் சாகில் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள் பெற்று உறுதி செய்திருந்தார். 

போட்டியின் சுருக்கம்

குவைட் – 85 (27.3) : மீட் பவ்ஸர் 20, சபிகுல்லாஹ் காபாரி 12/3, நூர் அஹ்மட் 18/2, பசால் ஹக் 21/2

ஆப்கானிஸ்தான் – 86/3 (12.5) : பர்ஹான் சாகில் 38*  

முடிவு – ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<