விசாகப்பட்டினத்தில் (23) நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>மகளிருக்கான தேசிய சுப்பர் லீக் T20 தொடர் ஜனவரியில் ஆரம்பம்
மேலும் இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் இன்னும் மூன்று போட்டிகள் மீதமிருக்க இந்தியா 2-0 என முன்னிலை அடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடுகின்றது. இந்த நிலையில் தொடரின் முதல் போட்டியில் தோல்வியினை தழுவிய இலங்கை வீராங்கனைகள் தொடரில் முதல் வெற்றியினை எதிர்பார்த்து களமிறங்கினர். அந்தவகையில் இரண்டாவது போட்டியிலும் நாணய சுழற்சியில் வென்ற இந்திய மகளிர் அணியினால் இலங்கை துடுப்பாடப் பணிக்கப்பட்டது.
அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை வீராங்கனைகள் இந்தியாவின் திறமையான பந்துவீச்சின் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டனர். இலங்கைத் தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ஓட்டங்கள் எடுக்க, அணித்தலைவி சாமரி அத்தபத்து 24 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் பெற்றார்.
இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் வைஷ்னவி ஷர்மா மற்றும் சிறி சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
>>இந்தியாவை வீழ்த்தி இளையோர் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்
பின்னர் 129 ஓட்டங்கள் என்கிற போட்டியின் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடிய இந்திய மகளிர் அணி ஷெபாலி வெர்மா வழங்கிய அதிரடியான துவக்கத்தினால், அவ்வணி போட்டியின் வெற்றி இலக்கினை வெறும் 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களுடன் அடைந்தது.
இந்திய மகளிர் அணியின் வெற்றியினை உறுதி செய்த ஷெபாலி வெர்மா 34 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 69 ஓட்டங்கள் பெற்றார். போட்டியின் ஆட்டநாயகியாக ஷெபாலி வெர்மா தெரிவானார்.
ஸ்கோர் விபரம்
Result
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Vishmi Gunaratne | c & b Kranti Goud | 1 | 3 | 0 | 0 | 33.33 |
| Chamari Athapaththu | c Amanjot Kaur b Sneh Rana | 31 | 24 | 3 | 2 | 129.17 |
| Hasini Perera | c & b Shree Charani | 22 | 28 | 3 | 0 | 78.57 |
| Harshitha Samarawickrama | run out (Amanjot Kaur) | 33 | 32 | 4 | 0 | 103.12 |
| Kavisha Dilhari | c Amanjot Kaur b Shree Charani | 14 | 18 | 0 | 0 | 77.78 |
| Nilakshi de Silva | c & b | 2 | 3 | 0 | 0 | 66.67 |
| Kaushani Nuthyangana | run out (Kranti Goud) | 11 | 9 | 1 | 0 | 122.22 |
| Shashini Gimhani | c Smriti Mandhana b Vaishnavi Sharma | 0 | 1 | 0 | 0 | 0.00 |
| Kawya Kavindi | run out (Shree Charani) | 1 | 1 | 0 | 0 | 100.00 |
| Malki Madara | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
| Extras | 12 (b 4 , lb 4 , nb 0, w 4, pen 0) |
| Total | 128/9 (20 Overs, RR: 6.4) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Kranti Goud | 3 | 0 | 21 | 1 | 7.00 | |
| Arundhati Reddy | 3 | 0 | 22 | 0 | 7.33 | |
| Sneh Rana | 4 | 1 | 11 | 1 | 2.75 | |
| Amanjot Kaur | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
| Vaishnavi Sharma | 4 | 0 | 32 | 2 | 8.00 | |
| Shree Charani | 4 | 0 | 23 | 2 | 5.75 | |
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Smriti Mandhana | c Kawya Kavindi b Kavisha Dilhari | 14 | 11 | 1 | 1 | 127.27 |
| Shafali Verma | not out | 69 | 34 | 11 | 1 | 202.94 |
| Jemimah Rodrigues | c Kavisha Dilhari b Kawya Kavindi | 26 | 15 | 4 | 0 | 173.33 |
| Harmanpreet Kaur | b Malki Madara | 10 | 12 | 0 | 0 | 83.33 |
| Richa Ghosh | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
| Extras | 9 (b 0 , lb 0 , nb 2, w 7, pen 0) |
| Total | 129/3 (11.5 Overs, RR: 10.9) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Malki Madara | 2.5 | 0 | 22 | 1 | 8.80 | |
| Kawya Kavindi | 3 | 0 | 32 | 1 | 10.67 | |
| Kavisha Dilhari | 2 | 0 | 15 | 1 | 7.50 | |
| Inoka Ranaweera | 2 | 0 | 31 | 0 | 15.50 | |
| Chamari Athapaththu | 1 | 0 | 17 | 0 | 17.00 | |
| Shashini Gimhani | 1 | 0 | 12 | 0 | 12.00 | |




















