கோடிகளை அள்ளவிருக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் உரிமையாளர்

1762

ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியினை கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) தவறான முறையில் நீக்கியமைக்கு இந்திய நாணயப்படி 4800 கோடி ரூபாயை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா அணியில் நான் ஒதுக்கப்பட்டேன் – மகாயா நிடினி

அந்தவகையில், நஷ்டஈடாக கிடைக்கவிருக்கும் 4800 கோடி ரூபா பணத்தினை வட்டியுடன் சேர்த்து ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளரான டெக்கான் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பி.சி.சி.ஐ இடம் இருந்து  பெறவிருக்கின்றது.

ஐ.பி.எல். தொடரில் 2008-2012 வரையிலான காலப்பகுதியில், ஹைதராபாத் நகரினை பிரதிநிதித்துவம் செய்து விளையாடிய ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியினை மோசமான நிதி முகாமைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நீக்கியது.

தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததோடு குறித்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியினை நீக்கியது தவறு என்பது உறுதியாகியிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இந்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதி CK தக்கார், டெக்கான் சார்ஜர்ஸ் அணி தொடர்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முடிவு தவறானது என்றும், அது சரியான காலத்தில் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

3TC கிரிக்கெட் தொடரின் தங்கத்தை வென்ற டி வில்லியர்ஸின் ஈகல்ஸ்

இதேநேரம், இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தற்காலிக நிறைவேற்று அதிகாரி, ஹேமாங்க் அமின், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் இருந்து தமக்கு வரவிருக்கும் அறிக்கையினை தொடர்ந்து பி.சி.சி.ஐ. இனால் அடுத்த முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<