தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் அஞ்சலோ மெதிவ்ஸ்

SLC Major League Tournament 2022

467

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் பதினொராவது வாரத்துக்கான 12 போட்டிகள் நேற்று (30) நிறைவுக்கு வந்தன.

ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸைப் போல 2ஆவது இன்னிங்ஸிலும் கோல்ட்ஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அஞ்சலோ மெதிவ்ஸ் அரைச் சதம் கடந்து 60 ஓட்டங்களைக் குவித்தார். இம்முறை மேஜர் லீக்கில் மெதிவ்ஸின் 3ஆவது அரைச் சதம் இதுவாகும்.

இதனிடையே, சிலாபம் மேரியன்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் இராணுவ விளையாட்டுக் கழகத்துக்காக அரைச் சதமடித்த துலின டில்ஷான் 2ஆவது இன்னிங்ஸில் சதமடித்து (112) அசத்தினார்.

மேலும், கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழக வீரர் மினோத் பானுக (118) சதமடித்து அசத்தியிருந்தார்.

அதேபோல, செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் இஷான் ரங்கன (109), களுத்துறை நகர கழகத்தின் சுகித மனோஜ் (152) மற்றும் சவன் கன்கானம்கே (105) ஆகிய மூவரும் சதங்களைக் குவித்தனர்.

பந்துவீச்சை பொறுத்தமட்டில் பதுரெலிய கிரிக்கெட் கழகத்தின் அலங்கார அசங்க சில்வா (5/56), கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் சொனால் தினூஷ (6/81), கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் ரொஹான் சன்ஜய (5/101), பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் நளின் ப்ரியதர்ஷன (6/85) ஆகிய வீரர்கள் பந்துவீச்சில் மிரட்டியிருந்தனர்.

கடற்படை விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகமும், நுகேகொட விளையாட்டக் கழகத்தை வீழ்த்தி பதுரெலிய கிரிக்கெட் கழகமும், பாணந்துறை விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி Ace Capitals கிரிக்கெட் கழகமும் வெற்றிகளைப் பதிவு செய்தன

போட்டியின் சுருக்கம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 427/8d (108.3) – பசிந்து சூரியபண்டார 181, கவிந்து குணசேகர 65, சொஹான் த லிவேரா 61, ஜனிஷ்க பெரேரா 24, தினுக டில்ஷான் 23, சாரங்க ராஜகுரு 2/80, சுதார தக்ஷின 2/84

களுத்துறை நகர கழகம் – 197 (59.1) – இஷான் அபேசேகர 50, சுகித மனோஜ் 43, நிபுன கமகே 35, ரமேஷ் மெண்டிஸ் 5/90, தீஷன் விதுசன் 4/64

களுத்துறை நகர கழகம் – 341/5d (97) – சுகித மனோஜ் 152, சவன் கன்கானம்கே 105, மாதவ நிமேஷ் 35, ரமேஷ் மெண்டிஸ் 4/88

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 45/0 (4)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 201 (76.1) – மாலிங்க அமரசிங்க 92, சமிது விஜேசிங்க 65, சஹன் அதீஷ 6/32, சச்சித்ர பெரேரா 2/59

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 144 (45.5) – ஹர்ஷ ராஜபக்ஷ 62, இயென் தேவ் சிங் 30, மாலிந்த புஷ்பகுமார 5/62, லக்ஷான் சந்தகன் 3/36

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 305/4d (59.1) – மினோத் பானுக 118*, நிமேஷ குணசிங்க 97, லசித் அபேரட்ன 39, பவன் ரத்நாயக 27, உமேக சதுரங்க 2/78

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 264 (71.4) – இமேஷ் உதயங்க 61, ஹர்ஷ ராஜபக்ஷ 38, இயென் தேவ் சிங் 34, சொனால் தினூஷ 6/81

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 486/6d (110) – தனன்ஜய லக்ஷான் 154, சங்கீத் குரே 64, அஞ்சலோ மெதிவ்ஸ் 61, ஹஷான் துமிந்து 60, ப்ரிமயமால் பெரேரா 58, விஷாத் ரன்திக 52*, சன்ஜுல பண்டார 3/97, நிபுன் மாலிங்க 2/63

ராகம கிரிக்கெட் கழகம் – 322/9d (81) – ஜனித் லியனகே 70, அவிஷ்க தரிந்து 61, நிஷான் மதுஷ்க 51, வஹிரு தவடகே 49, ரொஹான் சன்ஜய 5/101, அகில தனன்ஜய 2/104

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 233/6 (70) – அஞ்சலோ மெதிவ்ஸ் 60, ப்ரியமால் பெரேரா 51, சங்கீத் குரே 45, சஷிக துல்ஷான் 3/86, துனித் திமோதியா 2/24

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

SSC கழகம் – 375 (96.5) – மனோஜ் சரத்சந்திர 113, ரொஷேன் சில்வா 100, பிரபாத் ஜயசூரிய 57*, நிபுன் தனன்ஜய 29, நுவனிந்து பெர்னாண்டோ 24, தினுஷ்க மாலன் 3/70, நவீன் குணவர்தன 3/83

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 262 (74.4) – தமித் பெரேரா 95, சனோஜ் தர்ஷிக 71, முதித பிரேமதாச 34, பிரபாத் ஜயசூரிய 4/80, நிசல தாரக 3/69, கலன பெரேரா 2/33

SSC கழகம் – 169/5 (37.5) – க்ரிஷான் சன்ஜுல 76, ரொஷேன் சில்வா 51, தினுஷ்க மாலன் 3/40, லஹிரு ஜயரட்ன 2/33

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 137/3 (27) – கயான் மனீஷான் 66, தமித் பெரேரா 43, பிரபாத் ஜயசூரிய 2/51

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

காலி கிரிக்கெட் கழகம் – 223 (63.2) – நிஷான்த் குஷ்வாஹ் 74, வினுர துல்சர 39, ஷாலித் பெர்னாண்டோ 34, சதுர ரன்துனு 4/71, நுவன் ப்ரதீப் 2/33, சுபுன் மதுசங்க 2/20

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 269 (77.3) – துலாஸ் உதயங்க 55, சாமர சில்வா 50, மதுரங்ஷ சொய்சா 43, நதீர பாலசூரிய 24, ஹரின் புத்தில 3/63, ரகு சர்மா 3/88

காலி கிரிக்கெட் கழகம் – 190 (59.1) – டில்ஷான் கான்சன 32, வினுர துல்சர 32, சாலித் பெர்னாண்டோ 25, நளின் ப்ரியதர்ஷன 6/85, சதுர ரன்துனு 4/51

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 145/3 (31.3) – மதுரங்க சொய்சா 57, சதுரங்க குமார 38, நதீர பாலசூரிய 27

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 414 (133.1) – கசுன் அபேரட்ன 111, ரிசித் உபமால் 108, இஷிவர திஸாநாயக 67, லஹிரு டில்ஷான் 40, தரூஷ பெர்னாண்டோ 5/79, சாமிக எதிரிசிங்க 2/150

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 425/8 (128.2) – இஷான் ரங்கன 109, சச்சித ஜயதிலக 70, தரிந்து ரத்நாயக 50*, ரையன் பெர்னாண்டோ 46, தமித சில்வா 4/75, கீத் குமார 3/87

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

பதுரெலிய கிரிக்கெட் கழகம் நுகேகொட விளையாட்டுக் கழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 185 (48.3) – கரன் கைலா 37, கமிந்து மெண்டிஸ் 35, நவீன் பெர்னாண்டோ 20, லஹிரு கமகே 4/12, ருசிர கோஷித 2/43, சலன த சில்வா 2/67

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 304 (62.4) – மலிந்து மதுரங்க 129, சலன் டி சில்வா 52, அநுக் பெர்னாண்டோ 24, சுவத் மெண்டிஸ் 4/121, கரன் கைலா 3/67, சஹன் நாணயக்கார 2/58

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 334/8d (91.4) – அபிஷேக் லியனாஆராச்சி 89, பெதும் டில்ஷான் 55, டில்ஹார பொல்கம்பொல 52, அலங்கார அசங்க சில்வா 5/56

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 217/9 (52.4) – அநுக் பெர்னாண்டோ 67, ரனேஷ் சில்வா 44*, மிதிர தேனுர 31*, கரன் கைலா 5/56, ருமேஷ் புத்திக 2/23, சஹன் நாணயக்கார 2/78

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் ஒரு விக்கெட்டினால் வெற்றி

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 376 (100.1) – லக்ஷான் எதிரிசிங்க 112, மஹேஷ் குமார 106, துலின டில்ஷான் 50, அஷான் ரன்திக 35, ஸ்வப்னில் கூகளே 4/104, அவிந்து தீக்ஷன 3/109

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 272 (81) – திக்ஷில டி சில்வா 61, லசித் லக்ஷான் 60, ரவீன் யசஸ் 43, சீக்குகே பிரசன்ன 5/69, யசோத மெண்டிஸ் 2/19, சுமிந்த லக்ஷான் 2/46

இராணுவ விளையாட்டுக் கழகம் – 248/4 (77.5) – துலின டில்ஷான் 112*, ஹிமாஷ லியனகே 70, அஷான் ரன்திக 32, லக்ஷான் எதிரிசிங்ன 22

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

NCC கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

NCC கழகம் – 126 (37.3) – உபுல் தரங்க 26, அஹான் விக்ரமசிங்க 24, லஹிரு மதுசங்க 5/70, மதுக லியனபதிரனகே 3/18, சானக கொமசாரு 2/20

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 319 (91.3) – ஹஸ்னைன் பொக்ஹாரி 196, மதுக லியனபதிரனகே 22, லஹிரு மதுசங்க 21, அம்ஷி டி சில்வா 3/60, டில்ஷான் அரபகெதர 3/103, நிபுன் ரன்சிக 2/48

NCC கழகம் – 328 (105.4) – சஹன் ஆராச்சிகே 92, உபுல் தரங்க 68, சந்துன் வீரக்கொடி 33, லஹிரு உதார 25, ஹஸ்னைன் பொக்ஹாரி 3/67, மாதவ வர்ணபுர 2/31, சானக கொமசாரு 2/90

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 32/0 (8)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் Ace Capitals கிரிக்கெட் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 126 (34.4) – கௌஷான் தனுஷ்க 32, ரொஷான் விஜேநாயக 30, ரமின்த விஜேசூரிய 20, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/26, மொஹமட் இர்பான் 3/66, வனுஜ சஹன் 2/2, சிதும் திஸாநாயக 2/32

Ace Capitals கிரிக்கெட் கழகம் – 237 (64.1) – சகுன லியனகே 63, ஹர்ஷ குரே 47, லசித் க்ரூஸ்புள்ளே 44, வனுஜ சஹன் 23, நிமேஷ் விமுக்தி 8/82

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 124 (38.2) – சானக ருவன்சிறி 36, ரொஷான் விஜேநாயக 20, வனுஜ சஹன் 5/34, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/39

Ace Capitals கிரிக்கெட் கழகம் – 16/0 (2.1)

முடிவு – Ace Capitals கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுகளால் வெற்றி

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 315 (94.3) – டில்ஷான் முனவீர 85, ஜடின் சக்சேனா 82, ஜீவக ஷசின் 31, துலான்ஜன மெண்டிஸ் 5/94, மதுஷான் ரவிச்சந்திரகுமார் 2/50

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 276 (94.4) – கசுன் ஏகநாயக 79, உதயவன்ச பராக்ரம 53, மொவின் சுபசிங்க 50, ஜடின் சக்சேனா 4/63, தனுஷ்க சந்தருவன் 3/38, உபுல் இந்த்ரசிறி 3/92

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 171/7d (58) – ஜீவன சஷின் 42, கெவின் அல்மேதா 38, திமுத் சந்தருவன் 23, மொவின் சுபசிங்க 3/35, சச்சின் ஜயவர்தன 2/30

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 69/2 (16) – கசுன் ஏகநாயக

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 282 (85.3) – சஹன் கோசல 94, அதீஷ நாணயக்கார 63, அசன்த சிங்கப்புலி 41, ரவீன் டி சில்வா 4/86, நவோத் பரணவிதான 2/20

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 338 (90.2) – ரவிந்து பெர்னாண்டோ 61, நவோத் பரணவிதான 48, ரொன் சந்த்ரகுப்த 43, ரவீன் டி சில்வா 41, கவின் நாணயக்கார 6/100

கடற்படை விளையாட்டுக் கழகம் – 206 (43.4) – சவின் குணசேகர 63, புத்திக மதுஷான் 34, அதீஷ நாணயக்கார 24, ஷிரான் பெர்னாண்டோ 3/23, ரவீன் டி சில்வா 3/39, திலும் சுதீர 2/44

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 151/4 (20) – நவோத் பரணவிதான 61, சதீர சமரவிக்ரம 30, ரொன் சந்த்ரகுப்த 21*, நவின் கவிகார 2/66

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<