தனன்ஜய லக்ஷான் சதமடிக்க; அரைச் சதமடித்தார் மெதிவ்ஸ்

SLC Major League Tournament 2022

601

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் பதினொராவது வாரத்துக்கான 12 போட்டிகள் நேற்று (28) ஆரம்பமாகின.

இதில் கோல்ட்ஸ் கழகத்துக்காக விளையாடி வரும் இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ், ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் அரைச் சதம் கடந்து 61 ஓட்டங்களைக் குவித்தார். இம்முறை மேஜர் லீக்கில் மெதிவ்ஸின் 2ஆவது அரைச் சதம் இதுவாகும்.

இதனிடையே, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தனன்ஜய லக்ஷான் (113), SSC கழகத்தின் மனோஜ் சரத்சந்திர (113) மற்றும் ரொஷேன் சில்வா (100), முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பசிந்து சூரியபண்டார (131), லங்கன் கிரிக்கெட் கழகத்தின் கசுன் அபேரட்ன (111), பதுரெலிய கிரிக்கெட் கழகத்தின் மலிந்து மதுரங்க (113), இராணுவ விளையாட்டுக் கழகத்தின் லக்ஷான் எதிரிசிங்க (112), சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர்.

அதுமாத்திரமின்றி, போட்டிகளின் முதல் நாளன்று 17 அரைச் சதங்கள் குவிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் கண்டி சுங்க விளையாட்டு கழகத்தின் சஹன் அதீஷ (6/32), ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகத்தின் லஹிரு மதுஷங்க (5/70), பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் நிமேஷ் விமுக்தி (7/64), விமானப்படை விளையாட்டுக் கழகத்தின் துலான்ஜன மெண்டிஸ் (5/88) ஆகியோர் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (29) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

  • கொழும்பு கிரிக்கெட் கழகம் – 201 (76.1) – மாலிங்க அமரசிங்க 92, சமிது விஜேசிங்க 65, சஹன் அதீஷ 6/32, சச்சித்ர பெரேரா 2/59
  • கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 18/2 (8.3)

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

  • கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 357/3 (81) – தனன்ஜய லக்ஷான் 113*, சங்கீத் குரே 64, அஞ்செலோ மெதிவ்ஸ் 61, ஹஷான் துமிந்து 60, ப்ரிமயமால் பெரேரா 50

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

  • SSC கழகம் – 317/8 (90) – மனோஜ் சரத்சந்திர 113, ரொஷேன் சில்வா 100, நிபுன் தனன்ஜய 29, நுவனிது பெர்னாண்டோ 24, தினுஷ்க மாலன் 3/50, நவீன் குணவர்தன 2/69

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

  • முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 334/5 (91) – பசிந்து சூரியபண்டார 131*, கவிந்து குணசேகர 65, சொஹான் த லிவேரா 61, ஜனிஷ்க பெரேரா 24, தினுக டில்ஷான் 23, சுதார தக்ஷின 2/69

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

  • காலி கிரிக்கெட் கழகம் – 223 (63.2) – நிஷான்த் குஷ்வாஹ் 74, வினுர துல்சர 39, ஷாலித் பெர்னாண்டோ 34, சதுர ரன்துனு 4/71, நுவன் ப்ரதீப் 2/33, சுபுன் மதுசங்க 2/20
  • பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 111/4 (24) – மதுரங்க சொய்சா 43, நதீர பாலசூரிய 24, ஹரின் புத்தில 2/42

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

  • லங்கன் கிரிக்கெட் கழகம் – 291/5 (93) – கசுன் அபேரட்ன 111, ரிசித் உபமால் 76, தமித சில்வா 32, ப்ரசன்சன ஜயமான்ன 22

பதுரெலிய கிரிக்கெட் கழகம் நுகேகொட விளையாட்டுக் கழகம்

  • நுகேகொட விளையாட்டுக் கழகம் – 185 (48.3) – கரன் கைலா 37, கமிந்து மெண்டிஸ் 35, நவீன் பெர்னாண்டோ 20, லஹிரு கமகே 4/12, ருசிர கோஷித 2/43, சலன த சில்வா 2/67
  • பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 185/5 (41) – மலிந்து மதுரங்க 113*, அநுக் பெர்னாண்டோ 24, கரன் கைலா 2/37

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

  • இராணுவ விளையாட்டுக் கழகம் – 363/7 (93) – லக்ஷான் எதிரிசிங்க 112, மஹேஷ் குமார 93*, துலின டில்ஷான் 50, அஷான் ரன்திக 35, ஸ்வப்னில் கூகளே 3/102

NCC கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

  • NCC கழகம் – 126 (37.3) – உபுல் தரங்க 26, அஹான் விக்ரமசிங்க 24, லஹிரு மதுஷங்க 5/70, மதுக லியனபதிரனகே 3/18, சானக கோமசாரு 2/20
  • ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 149/7 (33.4) – ஹஸ்னைன் பொக்ஹாரி 72, லஹிரு மதுஷங்க 21, நிபுன் ரன்சிக 2/24, அம்ஷி டி சில்வா 2/35, டில்ஷான் அரபகெதர 2/55

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் Ace Capitals கிரிக்கெட் கழகம்

  • பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 126 (34.4) – கௌஷான் தனுஷ்க 32, ரொஷான் விஜேநாயக 30, ரமின்த விஜேசூரிய 20, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/26, மொஹமட் இர்பான் 3/66, வனுஜ சஹன் 2/2, சிதும் திஸாநாயக 2/32
  • Ace Capitals கிரிக்கெட் கழகம் – 197/9 (51) – ஹர்ஷ குரே 47, லசித் க்ரூஸ்புள்ளே 44, வனுஜ சஹன் 23, நிமேஷ் விமுக்தி 7/64

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

  • நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 295/8 (90) – டில்ஷான் முனவீர 85, ஜடின் சக்சேனா 82, ஜீவக ஷசின் 31, துலான்ஜன மெண்டிஸ் 5/88, மதுஷான் ரவிச்சந்திரகுமார் 2/50

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

  • கடற்படை விளையாட்டுக் கழகம் – 282 (85.3) – சஹன் கோசல 94, அதீஷ நாணயக்கார 63, அசன்த சிங்கப்புலி 41, ரவீன் டி சில்வா 4/86, நவோத் பரணவிதான 2/20
  • தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 14/0 (2)

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<