இளவயது கிரிக்கெட் வீரர்களை சர்வதேச தொடர்களுக்கு தயார்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) 17 வயதின் கீழ் கிரிக்கெட் வீரர்களுக்கான, இலங்கை இளையோர் லீக் (Sri Lanka Youth League) கிரிக்கெட் தொடர் இவ்வாரம் நடைபெறவுள்ளது.
>> ஷார்ஜா வொரியர்ஸ் அணியில் விளையாடவுள்ள மொயீன், லிவிஸ், நபி
ஒருநாள் போட்டிகளாக நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடரினை நடாத்துவதற்கு தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானதமும், குருநாகல் வெலகதர மைதானமும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த தொடரில் மொத்தம் நான்கு அணிகள் விளையாடவுள்ளதோடு அவ்வணிகள் இறுதிப் போட்டி வாய்ப்பினை பெற, நான்கு குழுநிலைப் போட்டிகளில் ஆட வேண்டிய நிலை காணப்படுகின்றது.
தொடர்ந்து குழுநிலைப் போட்டிகளுக்கு அமைய இறுதிப் போட்டியில் ஆடும் அணி தெரிவு செய்யப்படவிருக்கின்றது.
தொடரின் போட்டிகள் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு இறுதிப் போட்டி, இம்மாதம் 28ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெறுகின்றது.
அதேவேளை இந்தப் போட்டிகளில் திறைமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத் தொடரில், இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவம் செய்தவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
>> அசிதவின் சதத்துடன், பந்துவீச்சிலும் அசத்திய இலங்கை U19 கிரிக்கெட் அணி
இளையோர் லீக் போட்டித் தொடர் அட்டவணை
| திகதி | போட்டி | இடம் | போட்டி | இடம் | ||
| 22 ஒகஸ்ட் | காலி | கொழும்பு – வடக்கு | தம்புள்ளை | கொழும்பு – தெற்கு | கண்டி | வெலகதர |
| 23 ஒகஸ்ட் | தம்புள்ளை | கண்டி | தம்புள்ளை | கொழும்பு – தெற்கு | காலி | வெலகதர |
| 24 ஒகஸ்ட் | ஓய்வு நாள் | |||||
| 25 ஒகஸ்ட் | கொழும்பு வடக்கு | கொழும்பு – தெற்கு | தம்புள்ளை | காலி | தம்புள்ளை | வெலகதர |
| 26 ஒகஸ்ட் | தம்புள்ளை | கொழும்பு – தெற்கு | தம்புள்ளை | கண்டி | கொழும்பு வடக்கு | வெலகதர |
| 27 ஒகஸ்ட் | ஓய்வு நாள் | |||||
| 28 ஒகஸ்ட் | கண்டி | காலி | தம்புள்ளை | கொழும்பு வடக்கு | தம்புள்ளை | வெலகதர |
| 29 ஒகஸ்ட் | இறுதிப் போட்டி (தம்புள்ளை) | |||||
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















