துயரச்செய்தியாக மாறிய தேசிய அணி வீரர் டக்சனின் மரணம்

1505
National cap Duckson Puslas passes away

இலங்கை தேசிய கால்பந்து அணி வீரரான, டக்சன் பியூஸ்லஸ் மாலைதீவுகளில் வைத்து அகால மரணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

>> துறையப்பா அரங்கில் கிழக்கு வீரர்களை வீழ்த்திய வட மாகாண அணி

கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் 31 வயது நிரம்பிய டக்சன் பியூஸ்லஸின் இறந்த உடல் மாலைதீவுகளில் அவர் வாழ்ந்து வந்த வீட்டில் நேற்று (26) மாலை கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை தேசிய அணியின் பின்கள வீரரான டக்சன் பியூஸ்லஸ், மாலைதீவுகளில் நடைபெற்று வருகின்ற திவகி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், கிளப் வெலன்சியா அணிக்காக விளையாடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

டக்சனின் மரணம் தொடர்பில் மாலைதீவு பொலிசாரோ அல்லது அந்த நாட்டு கால்பந்து சபையோ இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடாத நிலையில், அவரது மரணம் தற்கொலையாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

டக்சனின் மரணம் இலங்கை கால்பந்து இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவரது நண்பர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது இரங்கல் செய்தியினை வெளியிட்டிருக்கின்றார்.

இதேநேரம் ThePapare.com உம் டக்சனின் மரணத்திற்கு தமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றது.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<