இத்தாலி பயணமாகும் இலங்கையின் சக்கர நாற்காலி டென்னிஸ் அணி

136

இத்தாலியில் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள BNP பரிபாஸ் டென்னிஸ் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை சக்கரநாற்காலி டென்னிஸ் (Sri Lanka Wheelchair Tennis) அணியினை ரஞ்சன் தர்மசேன வழிநடாத்துகின்றார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கையினை முன்னதாக பிரதிநிதித்துவம் செய்த இலங்கையின் முன்னணி சக்கரநாற்காலி டென்னிஸ்வீரரான ரஞ்சன் தர்மசேன தலைமையிலான அணியில் திஸ்ஸநாயக்க M. காமினி மற்றும் லசன்த சமரவீர ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.

பாராலிம்பிக் பதக்க கனவுடன் உள்ள சுரேஷ்

இந்த தொடருக்கான இலங்கையின் சக்கரநாற்காலி அணியானது ஜகத் வெலிகல மற்றும் கயங்க வீரசேகர ஆகியோர் மூலம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கடந்த ஜூலை மாதம் தொடக்கம் SLTA அரங்கில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இலங்கை சக்கரநாற்காலி டென்னிஸ் அணி, பரிபாஸ் டென்னிஸ் உலகக் கிண்ணத்தொடருக்கான விஷேட பயிற்சிகளுக்காக இன்று (19) நெதர்லாந்து நோக்கி பயணமாகின்றது.

இதேநேரம், 16 அணிகள் பங்குபெறுகின்ற பரிபாஸ் டென்னிஸ் உலகக் கிண்ணத்தொடரில் இலங்கை சக்கரநாற்காலி அணி அமெரிக்கா, ஆர்ஜென்டினா, பிரேசில், நெதர்லாந்து, தென்கொரியா, ஜப்பான், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் போட்டியிடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம் – Sunday Observer

மேலும் விளையாட்டுச் செய்திகளுக்கு…