இந்திய – இங்கிலாந்து T20 தொடர்; பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

134
BCCI

அஹமதாபாதில் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் பங்குபெறுகின்ற T20 தொடரில் எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளும் பார்வையாளர்களின்றிய நிலையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் தொடரினையும் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து – இந்திய அணிகள் இடையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் அதிகரித்துவருகின்ற கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையினைக் கருத்திற் கொண்டே, T20 தொடரின் எஞ்சிய போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடாத்துவதற்கு குஜராத் கிரிக்கெட் வாரியம் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. 

முன்னர், 50% வீத பார்வையாளர்களுக்கே இங்கிலாந்து – இந்தியா அணிகள் பங்கெடுக்கின்ற T20 தொடரினை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் 130,000 இற்கும் மேலானோர் பார்வையாளர்களாக வருகை தந்திருந்தனர். 

தற்போது, T20 தொடரின் எஞ்சிய போட்டிக்களுக்கான டிக்கட் விற்பனைகள் நடைபெற்றிருக்கும் நிலையில், இதற்குப் பெறப்பட்ட பணம் பார்வையாளர்களிடம் மீண்டும் கையளிக்கப்படும் எனவும் குஜராத் கிரிக்கெட் வாரியம் தாம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது. 

இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணியினை நிர்மூலமாக்கிய டில்ஷான்

மறுமுனையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் வாரியமும், T20 தொடரின் எஞ்சிய போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெறுவதனை உறுதி செய்திருக்கின்றது. 

அதேநேரம், நடைபெற்று முடிந்திருக்கும் T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி வீதம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<