பங்களாதேஷ் உயர் செயற்திறன் குழாத்தின் பயிற்றுவிப்பாளராக ரெட்போர்ட் நியமனம்

131
(tobyradfordcricketcoaching)

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் பிரிவின் பயிற்றுவிப்பாளராக டொபி ரெட்போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உயர் செயற்திறன் பிரிவின் பயிற்றுவிப்பாளராக சிமன் ஹெல்மட் செயற்பட்டுவந்த நிலையில், அவருக்கு பதிலாக ரெட்போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் பிரிவின் தலைவர் நய்முர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் வெல்லும்: இன்சமாம்

“நாம் டொபி ரெட்போர்ட்டை உயர் செயற்திறன் பிரிவின் அடுத்த பயிற்றுவிப்பாளராக அறிவிக்கிறோம். அவர் ஒரு ஆண்டுக்கு 100 நாட்கள் பயிற்றுவிப்பில் ஈடுபடுவார். குறித்த இந்த ஒருவருட காலப்பகுதியில் அவரின் செயற்திறனை கணித்து, அவரு ஒப்பந்தக்காலம் நீடிக்கப்படும்” என்றார்.

ரெட்போர்ட் தனது வாழ்நாளில் மிகச்சிறந்த பயிற்றுவிப்பாளர் ஒருவராக மாறிவருகின்றார். கடந்த காலங்களில் உலகளாவிய ரீதியில் உள்ள பல, கிரிக்கெட் அக்கடமிகளில் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார். இந்தநிலையில், பங்களாதேஷ் அணியுடனான இவரது முதல் பயணமாக அடுத்து வரும் இலங்கை சுற்றுப் பயணம் அமையவுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி எதிர்வரும் செப்டம்பர் 23ம் திகதி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், உயர் செயற்திறன் குழாமும், இலங்கைக்கு பயணிக்கவுள்ளது. 

Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32

பங்களாதேஷ் உயர் செயற்திறன் குழாம், இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான முக்கிய காரணம், பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் இலங்கை வந்து அதிக நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். எனவே, உயர் செயற்திறன் குழாத்துடன், பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் பயிற்சிப் போட்டிகளில் விளையாடும். 2018ம் ஆண்டு பங்களாதேஷ் உயர் செயற்திறன் குழாம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த போதும், குறித்த தொடர் பின்னர் நிறுத்தப்பட்டிருந்தது. 

இலங்கை வரும் பங்களாதேஷ் டெஸ்ட் குழாம், இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு எதிராக 2 நான்கு நாள் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் என்பவற்றில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க