மீண்டும் T20 போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் ஹர்பஜன் சிங்

101

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டில் சிறப்பாக ஆட முடிகிறது, பந்துவீச முடிகிறது என்றால் இந்திய கிரிக்கெட் அணிக்காக டி-20 போட்டிகளில் விளையாட தயாராக உள்ளதாக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2016 இல் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதியாக பங்கேற்றார்

வெளிப்புற பயிற்சி மேற்கொண்ட ஷர்துல் தாகூர் மீது பிசிசிஐ அதிருப்தி

அதற்கு பின் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் முழுதும் கதிரையில் உட்கார வைக்கப்பட்டு, பின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்தற்போது முழுநேர வர்ணனையாளராகவும், .பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கியிருந்த போதும், இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.  

ESPN Cricifo இணையத்தளத்துக்காக ஹர்பஜன் சிங் வழங்கிய செவ்வியில் கூறும்போது, இந்திய அணிக்காக விளையாட நான் தயாராக இருக்கிறேன், பந்துவீச்சாளர்களுக்குக் கடினமான .பி.எல் தொடரில் எனக்கு சிறப்பாக வீச முடிகிறது எனில், முன்னணி வீரர்கள் இதில் ஆடும்போது, சிறிய மைதானங்களில் பந்துவீச்சாளர்களுக்கு கடினமான .பி.எல் கிரிக்கெட்டில் சிறப்பாக வீசும்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் வீச முடியும்தானே

நான் .பி.எல் தொடரில் பவர் ப்ளேயில் பந்து வீசியும், மிடில் ஓவர்களை வீசியும் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன்.

.பி.எல் போன்று சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு அணியும் முன்னணி 6 வீரர்கள் சிறப்பாக இருப்பார்கள், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்திய அணிகளில் துடுப்பாட்ட வரிசை பலமாக இருக்கும்.

.பி.எல் கிரிக்கெட்டில் நான் டேவிட் வோர்னரையோ, ஜொனி பேர்ஸ்டோவையோ வீழ்த்த முடியும் என்றால், சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களை வீழ்த்த முடியாது என்றா நினைக்கிறீர்கள்? ஆனால் இந்திய அணிக்கு ஆடுவது என் கைகளில் இல்லை.  

ஆனால் இப்போதைய இந்திய கிரிக்கெட் அமைப்பில் ஒருவரும் உங்களிடம் இது பற்றி பேசக்கூட மாட்டார்கள்என ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒருகாலத்தில் நிரந்தர சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங், கடந்த 2011க்கு பின் சரிவை சந்தித்தார்.  

பின் 2015 இல் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய இவர், ஒரு ஆண்டுக்கு பின் மீண்டும் தனது இடத்தை பறிகொடுத்தார்

கொரோனாவினால் இலங்கை – இந்தியா தொடர் ரத்தாகுமா?

இவர் இந்திய அணிக்காக 103 டெஸ்டில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்த ஹர்பஜன் சிங் 2015 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இடம் பெறவில்லை.

.பி.எல் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 2018 இல் மோசமாக செயல்பட்ட ஹர்பஜன் சிங், 2019 இல் எழுச்சி பெற்றார். இவர் 2019 இல் நடைபெற்ற .பி.எல் கிரிக்கெட் தொடரில் 11 போட்டிகளில் 16 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இதன் மூலம் அந்த ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங் மூன்றாவது இடம் பெற்றார்

எதுஎவ்வாறாயினும், இவர் இந்தாண்டு .பி.எல் தொடரில் எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும் 39 வயதாகும் ஹர்பஜனை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் தயாராக இருக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.ளு

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<