கொரோனாவினால் இலங்கை – இந்தியா தொடர் ரத்தாகுமா?

126

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவிருந்த இந்தியா கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடங்கி உள்ளன பெரும்பாலான கிரிக்கெட் சபைகள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களது ஆலொசனைக்கமைய கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை இரத்து செய்து வருகின்றன

பும்ராவுக்கு வசீம் அக்ரமின் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரிட் பும்ரா போன்ற இளம் வேகப் பந்துவீச்சாளர்கள்…

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில், குறித்த தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ க்கு இலங்கை கிரிக்கெட் சபை கடிதம் எழுதியுள்ளது. இதில் எதிர்வரும் ஜூலை மாதம் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது

மேலும் தனிமைப்படுத்துதல் விதிகள் மற்றும் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்திய அணி வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்களா என்பது சந்தேகம் தான்.  

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் சாத்தியம் தற்போதைக்கு குறைவு தான் எனவும், கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்த தொடர் பின்னர் திட்டமிடப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

இதனிடையே, பிசிசிஐ சார்பில் இந்திய அரசின் விதிமுறைகள் மற்றும் முறையான பயண ஆலோசனைகள் வழங்கப்பட்ட பிறகு தான் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போதைய நிலையில் இந்த தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தான் நான் சொல்வேன். முதலில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.   

மேலும், சில வீரர்கள் மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் சிக்கிக்கொண்டுள்ளனர். விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் இல்லாமல் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வியுள்ளது.  

மேலும், இந்திய வீரர்களுக்கு சர்வதேச பயணத்துக்கு அனுமதி உள்ளதா? இதுபோன்ற விடயங்களுக்கு எப்படி தீர்வு கிடைக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும்

மேலும் கொரோனாவுக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஜூலை மாதம் நடுப்பகுதி வரை சர்வதேச பயணத்துக்கு அனுமதி உள்ளதாக தெரியவில்லை

பிசிசிஐ ஒப்புக்கொண்ட அனைத்து போட்டிகளையும் நிச்சயமாக நடத்தும், ஆனால் சூழல் அதற்கு தற்போது அனுமதிக்கவில்லை. இப்போது இல்லை என்றால் எதிர்காலத்தில் எப்படியும் நடத்தியே தீரும்.  

தற்போதைக்கு பாதுகாப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படும். தற்போதைய சூழலில் உள்ளூர் போட்டிகளை முன்னோக்கி எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்த உள்ளோம்” என தெரிவித்தார்.

ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் ரத்து செய்யப்பட்டதால், தற்போது இந்திய தொடரும் ரத்தாகும் பட்சத்தில் இது இலங்கை கிரிக்கெட் சபைக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.  

அதில் குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மூன்று வருடங்களாக உள்ள ஒளிபரப்பு ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்க்கிறது. எனினும், கொரோனா வைரஸ் காரணமாக அது தாமதமாகிவிட்டது.

மேலும் கிரிக்கெட் திரும்புவதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால் புதிதாக ஒளிபரப்பு உரிமையை அதிக ஏலத்துக்கு விடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது

இதில் ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் வரவிருக்கும் இந்திய சுற்றுப்பயணம் ஆகியவற்றுக்கான முழு ஒளிபரப்பு ஒப்பந்தத்திலிருந்து 65 முதல் 75 சதவிகிதம் வருவாயை இழக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது

இதுஇவ்வாறிருக்க, பிசிசிஐ நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கான சுற்றுப்பயணத்துக்கு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

இலங்கையின் பெரிய கிரிக்கெட் மைதானம் ஹோமாகமவில்

இலங்கையின் மிகப் பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஹோமாகம தியகமவில்…

அதற்காக இந்திய அணி வீரர்களுக்கு அடுத்த இரு மாதங்களுக்கு வீட்டிலேயே வைத்து பயிற்சி அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது

நான்கு கட்டங்களாக அடுத்த இரு மாதங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கட்டமாக பயிற்சியின் அளவை உயர்த்தவும், இதன் முடிவில் வீரர்களை மைதானத்தில் பயிற்சி செய்ய வைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில்,  ”தற்போதைய நிலையில் நாங்கள் தனி செயலி மற்றும் இணையத்தளம் மூலமாக வீரர்களுக்கு பயிற்சிகள் அளித்து வருகிறோம். வீரர்களுடன் தொடர்பில் உள்ளோம். ஆனால் அனைவரும் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பிக்க தயார் நிலையில் உள்ளனர்.

ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு, வெளியே செல்ல அனுமதி கிடைத்தால் கிரிக்கெட் வீரர்களுக்கு அருகே உள்ள மைதானம் அல்லது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என அவர் கூறினார்.

சுகாதார அறிவுரைகளுடன் பயிற்சிகளை தொடரவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கிரிக்கெட் போட்டிகள் முழுமையாக…

இதேவேளை, மும்பையில் முடங்கியுள்ள விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்த பயிற்சியில் பங்கேற்கமாட்டார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன

மறுபுறத்தில் இலங்கை அணி வீரர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது

கொழும்பை அண்மித்த பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு அமுல் நடைமுறைப்படுத்தப்பட்ட வருகின்ற காரணத்தால் இலங்கை வீரர்களுக்கான பயிற்சிகளை தம்புள்ளை அல்லது ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<