உலகக் கிண்ண வரலாற்றை எடுத்துக் கொண்டால் துடுப்பாட்ட வீரர்களின் அபார ஆட்டத்தால் பல அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்திருந்த போதிலும், உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட பெரும்பாலான அணிகள் தமது பந்துவீச்சினால் அந்த கனவை நனவாக்கி கொண்டதை வரலாறுகள் சான்று பகர்கின்றன.
உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு
அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் …………….
கடந்த 1975 மற்றும் 1979ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், 1983 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணங்களில் இந்தியாவும், 1999, 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியா அணியும் பந்துவீச்சாளர்களின் துணையுடன் சம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே, பந்து வீச்சாளர்கள் கடந்த கால உலகக் கிண்ணப் போட்டிகளில் தங்கள் அணியை வெற்றிபெறச் செய்வதில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர். எனினும், இம்முறை உலகக் கிண்ணமும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு போட்டித் தொடராக அமையுமா என்பது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துடுப்பாட்டத்துக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது கடினமாக இருப்பதை கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிகள் மற்றும் அதன் பெறுபேறுகள் சான்று பகர்கின்றன.
எதுஎவ்வாறாயினும், இம்முறை உலகக் கிண்ணத்தில் பல திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் களமிறங்கவுள்ளதால் அவர்களது நுணுக்கமான பந்துகள் நிச்சயம் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்பதுதான் அனைவரதும் கருத்தாகும்.
இந்த நிலையில், உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் ஐந்து வீரர்கள் பட்டியலில் தற்போதுள்ள எந்தவொரு வீரருக்கும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. எனினும், இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு மாத்திரம் முதல் 3 இடத்துக்குள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே, உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் குறித்த ஒரு சிறிய ஆய்வை இங்கு பார்க்கலாம்.
கிளென் மெக்ராத் (அவுஸ்திரேலியா)

அதிகம் பேசப்படாத இலங்கையின் நாயகன் டில்ஹார பெர்னாண்டோ
இலங்கை கிரிக்கெட் அணி இப்போது …………….
2003ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களில் 21 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், தன்னுடைய கடைசி (2007) உலகக் கிண்ணத்தில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
அத்துடன், கடந்த 2003இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வேகத்தில் மிரட்டிய மெக்ராத், 7 ஓவர்களில் 15 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்டதுடன், உலகக் கிண்ண அரங்கில் ஒரு இன்னிங்ஸில் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த வீரர்களில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டார்.
முத்தையா முரளிதரன் (இலங்கை)

மொத்தமாக 40 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 68 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 1996 முதல் 2011 வரை ஐந்து உலகக் கிண்ணப் தொடர்களில் விளையாடியுள்ள முரளிதரன், 4 தடவைகள் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதில் 1996 மற்றும் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் தலா 11 போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தார்.
உலகக் கிண்ண ஆட்ட நாயகர்களாக அதிகம் வலம்வந்த நட்சத்திர வீரர்கள்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 1877ஆம் ஆண்டு ஆரம்பமாகியதுடன், ஒருநாள் போட்டிகள் 1971………..
அதன்பிறகு 2003இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் 17 விக்கெட்டுகளையும், 2007இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் 23 விக்கெட்டுகளையும், இறுதியாக 2011 உலகக் கிண்ணத்தில் 15 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருந்தார்.
இதில் 2003இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்களில் இலங்கையின் வேகப் பந்துவீச்சாளர் சமிந்த வாஸுடன், முரளிதரன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வசீம் அக்ரம் (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் அணிக்காக ஐந்து உலகக் கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ள அவர், 38 ஆட்டங்களில் விளையாடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 4 விக்கெட்டுகள் பிரதியை இரண்டு தடவையும், 5 விக்கெட்டுகள் பிரதியை ஒரு தடவையும் கைப்பற்றியுள்ளார்.
1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் முதல்தடவையாகக் களமிறங்கிய வசீம் அக்ரம், அதில் 7 விக்கெட்டுகளையும், 1992 உலகக் கிண்ணத்தில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இலங்கை ஏ அணியில் விளையாடுவதை புறக்கணித்த சந்திமால்
இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற …………
இதேநேரம், 1999இல் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவராகச் செயற்பட்ட வசீம் அக்ரம், குறித்த தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், அவ்வணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதன்பிறகு 2003 உலகக் கிண்ணத்தில் 12 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருந்தாலும், பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
சமிந்த வாஸ் (இலங்கை)

எனினும், 2011 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் மேலதிக வீரராக சமிந்த வாஸ் இணைத்துக் கொள்ளப்பட்டாலும் அவருக்கு இறுதி பதினொருவர் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
31 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள வாஸ், 4 விக்கெட்டுகளை ஒரு தடவையும், 5 விக்கெட்டுகளை ஒரு தடவையும் வீழ்த்தியுள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய அவர், வெறுமனே 6 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றியிருந்தார்.
அதன்பிறகு, 1999ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற ஏழாவது உலகக் கிண்ணத்தில் 5 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சமிந்த வாஸ், 2003ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியுடனான லீக் ஆட்டத்தின் போது முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை (ஹெட்ரிக்) கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். அத்துடன். குறித்த தொடரில் அதிக விக்கெட்டுகளை (23) வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டார்.
வேகப் பந்துவீச்சில் மிரட்டி சாதித்துக் காட்டிய சமிந்த வாஸ்
உலகக் கிண்ண அரங்கில் தனது வேகப் பந்துவீச்சு…………….
சஹீர் கான் (இந்தியா)

உலகக் கிண்ணத்தில் 23 ஆட்டங்களில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 2003ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் 4ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
இதேநேரம், இந்தியாவின் மற்றுமொரு நட்சத்திர பந்துவீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத்தும், 34 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன், சஹீர் கானுடன் 5ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
லசித் மாலிங்க (இலங்கை)

உலகக் கிண்ணத் தொடர்களில் இலங்கை அணிக்கு மறக்க முடியாத இணைப்பாட்டங்கள்
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களை …………
எனவே, உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்று தற்போது விளையாடிவரும் ஒரேயொரு வீரரான மாலிங்க, இந்த முறை உலகக் கிண்ணத்தில் தனது அனுபவத்தினால் எதிரணி வீரர்ளுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக, இம்முறை உலகக் கிண்ணத்தில் குறைந்தபட்சம் 10 அல்லது 15 விக்கெட்டுகளை மாலிங்க கைப்பற்றினால், வசீம் அக்ரமின் 3ஆவது இடத்தைக் கைப்பற்றுவதற்கான அரிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.
அத்துடன், இம்முறை உலகக் கிண்ணத்தில் இரண்டு விக்கெட்டுகளை மாலிங்க எடுத்தால், சஹீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்தின் 5ஆவது இடத்தைக் கைப்பற்றிவிடுவார்.
இதேநேரம், நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌவுத்தியும் இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்றார். இதுவரை 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவருக்கு 3ஆவது இடத்தைப் பிடிக்க குறைந்தபட்சம் 20 விக்கெட்டுகளையாவது இம்முறை உலகக் கிண்ணத்தில் கைப்பற்ற வேண்டும். அதேபோல, தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிரும் 13 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுக்களுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 23ஆவது இடத்தில் உள்ளார்.
எனவே, இந்த மூன்று வீரர்களும் தான் இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களாக உள்ளனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<




















